கிருஷ்ணராயபுரம்: சிவாயம் தெற்கு கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடந்தது. கிருஷ்ணராயபுரம் தாலுகா மண்டல துணை தாசில்தார் சவுந்தரவள்ளி தலைமை வகித்தார். இதில், 14 கிராமங்களில் இருந்து 28 மனுக்கள் பெறப்பட்டு நான்கு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. நில அளவையர் ரமேஷ், வி.ஏ.ஓ., அனிதா உள்பட மக்கள் பலர் கலந்து கொண்டனர்.