சென்னை-அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நான்கு வீடுகளை விற்றுத் தருவதாக, 2.47 கோடி ரூபாய் மோசடி செய்த பைனான்சியரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்தவர் சுச்சரித்தா, 61. இவருக்கு, அதே பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் உள்ள, நான்கு வீடுகளை விற்றுத்தருவதாக, நெற்குன்றத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் ராமகிருஷ்ணன், பொது அதிகார பத்திரம் பெற்றுள்ளார்.இதையடுத்து, ராமகிருஷ்ணன், வளசரவாக்கம் சப்தகிரி நகரைச் சேர்ந்த பைனான்சியர் அங்கப்பனுடன் சேர்ந்து, சுச்சரித்தாவுக்கு சொந்தமான நான்கு வீடுகளையும், ராஜலட்சுமி மற்றும் கார்த்திக் ஆகியோருக்கு, 2.47 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளனர்.இந்த ரூபாயை சுச்சரித்தாவிடம் அளிக்காமல் மோசடி செய்துள்ளனர். இது குறித்து அவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, சில மாதம் முன் ராமகிருஷ்ணனை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த அங்கப்பனை, 45, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.