பொள்ளாச்சி: தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையால், அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. தற்போது, வடகிழக்குப்பருவ மழையும் தொடர்ந்து பெய்யும் நிலையில், நீர்வரத்து முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.நேற்று காலை, 8:00 மணி வரை, வால்பாறை - 34 மி.மீ., பரம்பிக்குளம் - 36, ஆழியாறு - 44, காடம்பாறை - 32, வேட்டைக்காரன்புதுார் - 43, மணக்கடவு - 36, சர்க்கார்பதி - 39, பொள்ளாச்சி - 86, என்ற அளவில் மழை பெய்தது.