'அம்மா மினி கிளினிக்' பெயர்மாற்றம் அ.தி.மு.க.,வினர் மத்தியில் அதிர்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2021
21:32

மேட்டூர்:சேலம், நவப்பட்டி ஊராட்சியில், 'அம்மா மினி கிளினிக்' பெயரை மாற்றி தி.மு.க.,வினர் பெயர் பலகை வைத்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


தமிழகம் முழுதும் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில், அ.தி.மு.க., அரசு சார்பில், 2,000 அம்மா மினி கிளினிக்குகள் துவங்கப்பட்டன.சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, நவப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அம்மா மினி கிளினிக் துவக்கப்பட்டது.


தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்களான நிலையில், நான்கு நாட்களுக்கு முன், நவப்பட்டி அம்மா மினி கிளினிக் முன்புறம் இருந்த பெயர் பலகை திடீரென மாற்றப்பட்டது.அப்பகுதி தி.மு.க.,வினர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் படத்துடன், 'முதலமைச்சர் மினி கிளினிக்' என பெயர் பலகை வைத்துள்ளனர். இது, அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கொளத்துார் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் விமலா கூறுகையில், ''அரசு விதியை மீறி வைத்துள்ள பெயர் பலகையை அகற்றக் கோரி, ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். இது குறித்து சுகாதாரத் துறைக்கும் அறிக்கை அனுப்பியுள்ளோம்,'' என்றார்.


நவப்பட்டி ஊராட்சி தலைவர் காளியம்மாள் கூறியதாவது:அம்மா மினி கிளினிக் பெயர் பலகையை மாற்றம் செய்து, ஊராட்சி அலுவலகம் முன் தி.மு.க.,வினர் பெயர் பலகை வைத்துள்ளனர். இதற்காக, ஊராட்சியில் எந்தவித அனுமதியும் பெறவில்லை. இது குறித்து, உள்ளாட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


ஏற்கனவே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன், அம்மா உணவகங்கள் செயல்படும் நிலையில், மதுரையில் ஓர் உணவகத்தில் கருணாநிதி படமும் வைக்கப் பட்டது.இது சர்ச்சையானதும், ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவர் படங்களுமே நீக்கப்பட்டன.இந்நிலையில், சேலத்தில் அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றப்பட்டு, அதில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் நீக்கப்பட்டு, கருணாநிதி, ஸ்டாலின் படங்களுடன், முதலமைச்சர் கிளினிக் என எழுதப்பட்டுள்ளது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X