பதிவறையை நாடும் மக்கள் பரிதவிப்பு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
பதிவறையை நாடும் மக்கள் பரிதவிப்பு
Added : நவ 26, 2021 | |
Advertisement
 

திருப்பூர்: மாவட்ட பதிவறையில் ஊழியர் பற்றாக்குறையால், பொதுமக்கள் தவிக்கின்றனர்.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட பதிவு அறை இயங்குகிறது.
நிலம் சார்ந்த பட்டா, சிட்டா, அடங்கல், சர்வே சார்ந்த ஆவணங்கள் இங்கு பாதுகாக்கப்படுகிறது.உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், காங்கயம், அவிநாசி, ஊத்துக்குளி, திருப்பூர் வடக்கு, தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட மக்கள் தினம், நுாற்றுக்கும்மேற்பட்டோர், பல்வேறு ஆவண நகல்கள் பெறுவதற்காக மாவட்ட பதிவறையை நாடுகின்றனர்.பதிவறையில், இரண்டு பதிவுத்துறை எழுத்தர்; ஒரு அலுவலக உதவியாளர் பணியிடங்கள் உள்ளன.
ஆனால், ஒரு பதிவுத்துறை எழுத்தர் மட்டுமே உள்ளார். அரசு துறை சார்ந்த ஆவணங்களை எடுப்பதற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.ஊழியர் பற்றாக்குறையால், பதிவறையை நாடும் பொதுமக்கள், ஆவண நகல்கள் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆவணங்களை பெற, நீண்ட காலம் காத்திருக்கவேண்டியுள்ளதால், வெளியூர் பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.மாவட்ட பதிவறைக்கு தேவயான ஊழியர்களை நியமிக்கவேண்டும் என, மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி, கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X