அவிநாச: அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தில், நூல் விலை உயர்வை கண்டித்து, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர், நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நுால் விலை உயர்வை கண்டித்தும், விசைத்தறி தொழிலாளிக்கு கூலி உயர்வு கேட்டு சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், வஞ்சிபாளையம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், சி.ஐ.டி.யு., விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநில தலைவர் முத்துசாமி, மாவட்ட தலைவர் வேலுசாமி, சி.ஐ.டி.யு., பனியன் தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி ஈஸ்வரமூர்த்தி, விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் முருகன், பழனிச்சாமி, மோகனசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.