கொள்ளையர்கள் ஆறு பேர் கைது தலைமறைவான ஏட்டுக்கு வலை | விருதுநகர் செய்திகள் | Dinamalar
கொள்ளையர்கள் ஆறு பேர் கைது தலைமறைவான ஏட்டுக்கு வலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 நவ
2021
00:02

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் ஓய்வு பெற்ற பி.டி.ஓ., வை கட்டிப் போட்டு கொள்ளையடித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். உடந்தையாக இருந்த ஏட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி லட்சுமி நகரில் வசிப்பவர் ஓய்வு பெற்ற பி.டி.ஓ., கணேசன், 82. அக். 26 ல் இவர் வீட்டில் இருந்தபோது 'பிளாட்' வாங்குவது போல வந்த இருவர் கணேசனை கட்டிப்போட்டு பீரோவில் இருந்த 4.25 லட்சம், 5.5 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்.ஐ., ஜோதிமுத்து தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். மதுரை-துாத்துக்குடி ரோடு அருகில் இருந்த 6 பேரை பிடித்து விசாரித்தனர்.அதில் அவர்கள் கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த கோபி கண்ணன் 30, ராஜபாளையத்தை சேர்ந்த சம்பத்குமார் 51, திருமங்கலம் மேலகோட்டையை சேர்ந்த மகேஷ் வர்மா 27, அஜய் சரவணராஜ் 29, மதுரை ஆனையூரை சேர்ந்த அலெக்ஸ்குமார் 36, திடீர் நகரை சேர்ந்த மூர்த்தி 34, என்பதும், இவர்களுக்கு உடந்தையாக அருப்புக்கோட்டை டவுன்போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் ஏட்டு இளங்குமரன் இருந்ததும் தெரியவந்தது.

அவர்கள் ஓய்வு பி.டி.ஓ., வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். ஆறுபேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து இரண்டரை பவுன் நகை,ரூ. 88 ஆயிரம்,1 கார் மற்றும் 2 பைக்கை பறிமுதல் செய்தனர். ஏட்டை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X