கொரோனா பெரும் தொற்று பரவத் துவங்கிய போது மூடப்பட்ட பள்ளிகளில், நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளன.ஒவ்வொரு குழந்தைகளின் பெற்றோருக்கும், மனதில் சிறிதளவு பயம் இருக்கத்தான் செய்கிறது.
'வீட்டுக்கு திரும்பி வர்ற வரைக்கும் மாஸ்க்கை கழட்டக்கூடாது' என பிள்ளைகளை அறிவுறுத்தி அனுப்புகின்றனர் பெற்றோர்.ஆனால் மாலை திரும்பும் வரை எந்த வகையான மாஸ்க், குழந்தைகள் அணிய வசதியாக இருக்கும் என்பதை கவனித்து வாங்கித்தருவது முக்கியம்.காதுகளில் அணியும், 'இயர் ஸ்ட்ராப்' மாஸ்க்குகளை பெரியவர்களே கொஞ்ச நேரம் அணிந்து இருந்தால், காது பகுதிகளில் அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது. அவ்வகை மாஸ்க்குகளை பள்ளி குழந்தைகள் நீண்ட நேரம் அணிந்து இருப்பது கடினம்.அதுவே கழுத்தில், 'நெக் ஸ்ட்ராப் மாஸ்க்' எனப்படும், செயின் போல் அணியும் மாஸ்க்குகள் வலி ஏற்படுத்துவது இல்லை. பள்ளியில் உணவு சாப்பிடும் போதும், தண்ணீர் குடிக்கும் போதும் கழற்றி வைக்க தேவை இல்லை. சிறுவர்களின் கழுத்திலேயே இருக்கும்.இதனால் முழு நேரமும் மாஸ்க் அணிய ஏற்றவாறு உள்ளது. எனவே பெற்றோர்களே... உங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது, இது போல் 'சவுகரியமான' மாஸ்க்கை கொடுத்து அனுப்புங்கள்.