மறுபடியும் பரவுகிறது புதிய வகை கொரோனா: விமான பயணிகள் தீவிர கண்காணிப்பு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
மறுபடியும் பரவுகிறது புதிய வகை கொரோனா: விமான பயணிகள் தீவிர கண்காணிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 நவ
2021
00:39



கோவை: அதிக வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா, 3 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதால், கோவை வரும் விமான பயணிகள், தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் வூகான் நகரில் உருவான கொரோனா வைரஸ், பலமுறை உருமாறி புதிய வகை வைரஸ்களை உருவாக்கி உள்ளது. புதிதாக உருவான டெல்டா, பீட்டா வகை வைரஸ் அதிக வீரியத்துடன் பரவி வருகிறது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட, புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.இதுவரை, 22 பேரை புதிய வைரஸ் தாக்கி உள்ளது. தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவிலிருந்து விமானம் மூலம் பயணித்த பயணிகளால், ஹாங்காங், போர்ட்ஸ்வானா உள்ளிட்ட மூன்று நாடுகளில், புதிய வைரஸ் நோய் பரவி இருக்கிறது. இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் வெளியிட்டுள்ள செய்தியில், 3 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். சளி மாதிரிகளை பரிசோதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மூன்று சர்வதேச நாடுகளில் அதிக வீரியம் கொண்ட கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால், கோவை வரும் விமான பயணிகள், தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று நாடுகளின் பயணிகளிடம் உஷார்!மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில், ''ஏற்கனவே கோவை விமான நிலையத்தில், சர்வதேச பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது, மத்திய அரசின் உத்தரவின்படி, குறிப்பிட்ட மூன்று நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். கோவை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X