குனியமுத்தூர்: ஆத்துப்பாலம் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் சிறுமி, குனியமுத்தூர் சிறுவாணி டேங்க் சாலையை சேர்ந்த தவுபிக், 23 என்பவருடன் கோவை திரும்பினார்.போலீசார் விசாரணையில், திருமணம் செய்வதாக கூறி, பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, தவுபிக் சிறையிலடைக்கப்பட்டார்.