ரயில் மோதி 3 யானைகள் பலியான பரிதாபம்: இரவில் கோவையில் நடந்தேறிய சோகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

27 நவ
2021
00:47
பதிவு செய்த நாள்
நவ 27,2021 00:44


கோவை: கோவையில் நேற்றிரவு தண்டவாளத்தை கடக்க முயன்ற குட்டி உள்பட மூன்று யானைகள், ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியாகின.


கோவை, மதுக்கரை வனச்சரகம், நவக்கரை, மகேந்திர மேடு, தங்கவேல் காட்டு மூளை என்ற இடம் உள்ளது. இங்கு உள்ள ரயில்வே தண்டவாளத்தை, நேற்றிரவு, பெண் யானை உட்பட மூன்று யானைகள், கடக்க முயன்றன.


அப்போது, அவ்வழியாக கேரளாவில் இருந்து மங்களூர்- - சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 12602) யானைகள் மீது மோதியது. இதில் யானைகள் படுகாயமடைந்து சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு, அதே இடத்தில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தன.


சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு, மதுக்கரை வனச்சரக அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரித்து வருகின்றனர். ரயிலில் அடிபட்டு யானைகள் பலியாகும் சம்பவம், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-நவ-202121:38:53 IST Report Abuse
சாம் அந்த ஜீவன்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்... யானை கடக்க பாலங்கள் போன்ற அமைப்புகள் கட்டலாம்.. வேலி அமைப்புகள் கட்டலாம்...
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
27-நவ-202116:13:53 IST Report Abuse
Samathuvan இது வனத்துறை தவறா? ரயில்வே துறையா? அல்லது அரசாங்கமா? இது முற்றிலும் ஆறறிவு உள்ளவன் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கேடுகெட்ட மனித அறிவு ஜீவிகள் குற்றம் அல்லது அவன் செய்யும் மன்னிக்கமுடியாத மஹாபாவம் .காட்டையும் அதன் வழங்களையும் அழித்தால் இந்த ஐந்து(இது நாம் சொன்னது, மிருகங்கள் மனிதனை விட மேல்) அறிவு ஜீவன்கள் எங்கே போகும் அதனுடைய உணவை தேடி?. நிறைய நாடுகளில் இது போல ரயில்களும், போக்குவரத்தும் காடுகளின் ஊடாகத்தான் செல்லுகின்றனன. ஆனால் இருபுறமும் வேலிகள் அமைக்கப்பட்டு அது மறுபுறம் கடக்க வேண்டும் என்றால் சிறிது சிறிது இடை வெளியில் வனத்துறையம் மிருகங்களும் கடக்க பாலங்கள் ஏற்படுத்த பட்டு இருக்கின்றன. இது எல்லாம் சாத்தியமா? சாத்தியமே. என்ன செய்வது நமக்கு இதுவரை மனித இனத்தினுடைய மகிமையே புரியவில்லை. மிருகங்கள் என்ன அதற்கும் அப்பாற்பட்டதா? ஆடி அடங்கும் வாழ்க்கையடா
Rate this:
Cancel
27-நவ-202113:23:13 IST Report Abuse
SUBBU, MADURAI வேறெந்த சிறிய விலங்கு ரயிலில் அடிபட்டு இறந்தாலும் மனசு ஆறிவிடும்.ஆனால் உருவத்தில் பெரிய விலங்கான யானை அடிபட்டு இறப்பது கொடுமை.மனசே ஆற மாட்டேங்குது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X