கோவை: கோவை மாநகரில் டிச.,10 வரை, எந்த விதமான போராட்டம் நடத்தவும் அனுமதி கிடையாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் அறிக்கை:சமீப காலமாக பல்வேறு அமைப்பினர், ஆர்ப்பாட்டம், போராட்டம், நினைவேந்தல், ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளை கோவை மாநகரில் நடத்த திட்டமிட்டிருப்பதாக, சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.இத்தகைய செயல்கள், மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும்; பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும்; பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பதட்டத்தை உருவாக்கும் வகையில் உள்ளன.எனவே சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், தேவையற்ற பதட்டத்தை தவிர்க்கவும் நவ.,26 முதல் டிச.,10 வரை, எந்த ஒரு அரசியல் கட்சியினரோ, அமைப்பினரோ, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கிடையாது. இதை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த உத்தரவுக்கு அனைத்து அரசியல் கட்சியினரும், அமைப்பினரும், பொதுமக்கள் நலன் கருதி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, கமிஷனர் தெரிவித்துள்ளார்.