புதுச்சேரியில் தொடர் செயின் பறிப்பு வழக்கில் மதுரை ரவுடிகள் 4 பேர் கைது; 30 சவரன் மீட்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2021
04:56

புதுச்சேரி-புதுச்சேரியில் 12 இடங்களில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட மதுரை ரவுடி கும்பலை 2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரியில் 2019ம் ஆண்டு மே 31ம் தேதி கோரிமேட்டில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயினை பறித்து சென்றனர்.ஜூன் 7ம் தேதி தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகர் பகுதியில் மொபட்டில் சென்ற பெண்ணிடமும், லாஸ்பேட்டை லட்சுமி நகர், குமரன் நகர் பகுதியில் கத்தியை காட்டி மூன்று பெண்களிடமும் செயின் பறித்து சென்றனர்.அடுத்த சில நாட்களில் தாகூர் நகரில் வீட்டு வாசலில் நின்றிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 9 சவரன் செயினை பறித்து சென்றனர். அதே கும்பல், கருவடிக்குப்பம் ஜிஞ்சர் ஓட்டல் அருகே டைலர் கடைக்குள் புகுந்து, பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி செயின் பறித்து சென்றனர்.ஜூன் 14ம் தேதி உருளையன்பேட்டை முல்லை நகரில், திருமணத்திற்கு சென்று திரும்பிய பைனான்சியர் விநாயகம் மனைவி பிரேமா, 53, கழுத்தில் இருந்த 12 சவரன் செயினை பறித்தனர். செயின் பறிப்பில் ஈடுபட்டது மதுரை ரவுடி அப்பளம் ராஜா, பாட்டில் மணி கும்பல் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. வடக்கு எஸ்.பி., சுபம்கோஷ் உத்தரவின்பேரில், லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்இன்ஸ்பெக்டர் திருமுருகன் மேற்பார்வையில், வடக்கு கிரைம் போலீஸ்காரர்கள் ஜெயகுமார், ராஜி, கோவிந்தன், ராஜவேல் குழுவினர் மதுரை சென்றனர்.அங்கு ரவுடி அப்பளம் ராஜாவின் கூட்டாளிகளான, ஜெய்ஹிந்த்புரம் ரவுடி ராம்கி (எ) கந்தசாமி, 32; கார்த்தி, 30; மதுரை டி.வி.எஸ். நகர், ராஜம் சாலை, செந்தில் (எ) உண்டியல் செந்தில், 30; சிவகங்கை மனகரை ஆனந்த் (எ) டக்கி ஆனந்த், 24; ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 சவரன் நகைகளை பறிமுதல் செய்து, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.அவர்கள் அடகு வைத்த மீதமுள்ள நகைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு புதுச்சேரி ரவுடி உள்ளிட்ட இருவர் உதவியுள்ளனர். செயின்பறிப்பில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையில் கணிசமான தொகை புதுச்சேரி ரவுடிக்கும் கொடுத்துள்ளனர். எனவே, மதுரை ரவுடி கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X