பாராட்டு; புதுச்சேரி சுகாதார திட்டங்களுக்கு மத்திய குழு...90 சதவீத நிதியை ஏற்க முதல்வர் வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2021
04:59

புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் ஐந்து நாட்கள் முகாமிட்டு ஆய்வு செய்த மத்திய சுகாதார குழுவினர், மக்களின் நம்பிக்கையை அரசு மருத்துவமனைகள் பெற்றுள்ளன என, பாராட்டு தெரிவித்தனர்.



மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பொது ஆய்வு திட்ட குழு ஒவ்வொரு மாநிலமாக சுகாதார அமைப்பினை ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து வருகிறது.அதன்படி, 14-வது மாநிலமாக புதுச்சேரி மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பினை ஆய்வு செய்ய பொது சுகாதார சேவைகள் இயக்குனரகத்தின் ஆலோசகர் கன்வார் சென் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவினர் கடந்த 21ம் தேதி புதுச்சேரி வருகை தந்தனர்.



இவர்கள், இரு குழுவாக பிரிந்து ஒரு குழுவினர் புதுச்சேரி பிராந்தியத்திலும், மற்றொரு குழுவினர் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களை பார்வையிட்டு, மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.சுகாதாரத்துறையின் பல்வேறு நிலையில் உள்ள அதிகாரிகளிடம் மருத்துவமனைகளின் செயல்பாடு, கட்டமைப்பு வசதிகளை கேட்டறிந்தனர். கடந்த ஐந்து நாட்களாக ஆய்வு மேற்கொண்ட இக்குழுவினர் நேற்று சட்டசபையில், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கலந்துரையாடினர்.அப்போது, புதுச்சேரி மாநிலத்தில் சுகாதாரத்தின் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. மருத்துவமனையில் நோயாளிகளுக்கான போதுமான படுக்கை, மருந்து வசதிகள் உள்ளன. 3 கி.மீ., தொலைவிற்குள்ளாகவே மருத்துவமனைகள் உள்ளது. மக்களின் நம்பிக்கையை அரசு மருத்துவமனை பெற்றுள்ளன என பாராட்டு தெரிவித்தனர்.தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி பேசுகையில், 'சுகாதார திட்டங்களுக்கு கடந்த காலங்களில் மத்திய அரசு 90 சதவீதம், மாநில அரசு 10 சதவீதமும் செலவினை ஏற்றுக்கொண்டன.



தற்போது மத்திய சுகாதார திட்டங்களுக்கு 60;40 என்ற விகிதாச்சாரத்தில் நிதி வழங்கி வருகிறது. அதனை மாற்றி முன்புபோல் 90 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கிட பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.முதல்வரின் கோரிக்கையை, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்வதாக மத்தியக்குழுவினர் உறுதியளித்தனர்.தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் மாநிலத்தில் குழந்தை இறப்பு விகிதம் தடுப்பு, ஆண்-பெண் விகிதாச்சாரம், பிரசவ இறப்பு தடுப்பு என சுகாதார திட்டங்கள், தேசிய அளவில் ஒப்பிடுகையில் புதுச்சேரி மாநிலத்தில் சிறப்பாக செயல்படுத்தி உள்ளதாக பாராட்டு தெரிவித்த மத்திய குழுவினர் சில ஆலோசனையும் வழங்கினர்.



குறிப்பாக கரிக்கலாம்பாக்கம் உள்ளிட்ட பல ஆரம்ப சுகாதார நிலையங்களில், பிரசவம் பார்க்க கூடிய அளவிற்கு திறமையான மருத்துவர்கள், கட்டமைப்புகள் உள்ளதால், அங்கேயே பிரசவம் பார்க்க நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனர்.தொடர்ந்து மாநில அரசின் பல்வேறு கோரிக்கைகளை கேட்ட மத்திய குழுவினர், ஒரு வாரத்திற்குள் புதுச்சேரி மாநிலத்தின் சுகாதார மதிப்பீடு குறித்த தங்கள் ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X