3 யானைகள் பலி; இரவில் நடந்தேறிய சோகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2021
05:00


கோவை : கோவையில், நேற்றிரவு தண்டவாளத்தை கடக்க முயன்ற குட்டி உட்பட மூன்று பெண் யானைகள் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியானது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை, மதுக்கரை வனச்சரகம், நவக்கரை, மாவுதம்பதி மலை கிராமத்தை ஒட்டி மகேந்திர மேடு, தங்கவேல் காட்டு மூளை என்ற இடம் உள்ளது. இப்பகுதியிலுள்ள ரயில்வே தண்டவாளத்தை நேற்றிரவு, 9:05 மணியளவில், 25 வயதுடைய பெண் யானை, 18 மற்றும் 10 வயதுடைய இரண்டு பெண் யானைகளுடன் கடக்க முயன்றது.



அப்போது, அவ்வழியாக கேரளாவில் இருந்து மங்களூர்- - சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 12602) வேகமாக வந்து, தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைகள் மீது பயங்கரமாக மோதியது. யானைகள், ரயில் இன்ஜினில் சிக்கி படுகாயமடைந்து சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு, சம்பவ இடத்திலேயே அடுத்தடுத்து பரிதாபமாக பலியாயின.கிராம மக்கள், ரயில்வே போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு மருத்துவ குழுவினருடன் வனத்துறையினர் விரைந்தனர். ரயில்வே போலீசாரும் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.



மூன்று காட்டு யானைகள் உயிரிழந்தது கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காரணம் என்னகோவை- - பாலக்காடு ரயில் வழித்தடத்தில், ரயில் மோதி யானைகள் பலியான சம்பவம் அனைத்தும் இரவில் தான் நடந்துள்ளன. நேற்று நடந்த விபத்தும் இரவில் தான் நடந்துள்ளது. அனைத்து யானை உயிரிழப்புகளும், ஜூன் முதல் டிச., மாதங்களுக்குள் மட்டுமே நடந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.



வாளையார் மற்றும் எட்டிமடை ரயில் நிலையங்களுக்கு இடையே, 3 கி.மீ., துாரத்துக்குள் விபத்துக்களால் யானைகள் உயிரிழந்துள்ளன. சுமார், 11 கி.மீ., நீளமுள்ள இந்த இரு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பகுதியில் தான், அதிக விபத்துகள் நடந்து வருகின்றன.பொதுவாக இந்த வழித்தடத்தில், 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.



ஆனால், பல நேரங்களில் அதிவேகமாக இயக்கப்படுவதால் விபத்துக்கு காரணமாக உள்ளது. கோவை - பாலக்காடு இடையே ரயில்களின் வேகத்தை கண்டறிய எவ்வித சென்சார் கருவியும் பொருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எத்தனை யானைகள்ஒரு யானையின் உயிரிழப்பு, ஒரு காடு அழிவதற்கு சமமானது. கோவை - பாலக்காடு இடையே ரயில் மோதி யானைகள் உயிரிப்பது தொடர் கதையாகி வரும் நிலையில், பாதுகாப்பு நடைமுறைகளை ரயில்வே நிர்வாகம் முறையாக பின்பற்றவில்லை என புகார் தெரிவிக்கப்படுகிறது.



மூன்று யானைகள் உயிரிழந்துள்ள நிலையில், ரயில்வே நிர்வாகத்துக்கு, ரூ.45 கோடி வரை அபராதம் விதிக்க வேண்டும் என, வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, 2016 - 2021 வரையிலான ஐந்து ஆண்டுகளில், 8 யானைகள் இதே வழித்தடத்தில் ரயிலில் அடிபட்டு பலியானது குறிப்பிடத்தக்கது.



ரயில் மோதி யானைகள் உயிரிழந்தது குறித்து, மத்திய குழுவினர் பாலக்காடு - மதுக்கரை இடையேயான ரயில்பாதையில் கடந்த, செப்., 4ம் தேதி தான் ஆய்வு மேற்கொண்டனர்.கைது செய்ய வாய்ப்புநிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகத்தில் ரயிலை இயக்கியதாலேயே விபத்து ஏற்பட்டு யானைகள் பலியானது என்று, வனத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



இதையடுத்து ரயிலை இயக்கிய இரு லோக்கோ பைலட்டுகளிடமும் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரையும் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, வேறு இரு ரயில் லோக்கோ பைலட்கள் வாயிலாக ரயில் இயக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X