புதுச்சேரி-புதுச்சேரி கொசக்கடை வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ், 42; இவரது மனைவி வள்ளி (எ) பிரியா. ரமேஷ் வேலைக்கு செல்லாததால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.வள்ளியிடம் தகராறு செய்து கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேஷ் வெளியே சென்றுள்ளார். குயவர்பாளையம், ஆனந்த முத்து மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள நண்பர் ராஜி வீட்டில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் காலை ரமேஷ் தங்கிய அறை கதவை தட்டியும் திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது, ரமேஷ் மின் விசிறியில் துாக்கில் இறந்த நிலையில் தொங்கினார்.புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.