சட்டசபை அலுவலக ஒதுக்கீட்டில் பாரபட்சம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2021
05:12

புதுச்சேரி-புதுச்சேரி சட்டசபையில் அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் தனித்தனியே அலுவலகம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.,வான தி.மு.க.,வை சேர்ந்த சம்பத்திற்கு 10 அடிக்கு 10 அடி அளவிலான அறை ஒதுக்கப்பட்டது.ஆனால், மேஜை, நாற்காலி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. இதனைக் கண்டித்து, சம்பத் எம்.எல்.ஏ., நேற்று மதியம் 12:30 மணி முதல் 2:00 மணி வரை தனக்கு ஒதுக்கீடு செய்த அலுவலகத்தில் தரையில் அமர்ந்து பணியை தொடங்கினார்.இதுகுறித்து சம்பத் எம்.எல்.ஏ., கூறுகையில், 'எனது தொகுதியில் சாலை அமைக்காத அரசைக் கண்டித்து எனது சொந்த செலவில் சாலை அமைத்தேன். அனைத்து ரேஷன் கார்டிற்கும் மழை நிவாரணம் வழங்க அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் போராட்டத்திற்கு அழைத்தேன். இதுபோன்று அரசுக்கு எதிராக செயல்பட்டதால், என்னை அவமானப்படுத்தும் நோக்கில், அலுவலகத்திற்கு மேஜை, நாற்காலி வழங்கவில்லை. இதுபோன்ற இடையூறுகளை தாண்டி, மக்களுக்கான எனது பணி தொடரும்' என்றார். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, 'கடந்த காலங்களில் கட்சி அடிப்படையில் அலுவலகம் ஒதுக்கப்பட்டது. இம்முறை அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் தனித்தனியே அலுவலகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால், புதிதாக மேஜை, நாற்காலி வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X