புதுச்சேரி அரசை முடக்கும் வேலையை மத்திய பா.ஜ., அரசு செய்கிறது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2021
05:17

புதுச்சேரி-புதுச்சேரியில் ரங்கசாமியின் அரசை முடக்கும் வேலையை மத்திய பா.ஜ., அரசு செய்து கொண்டிருப்பதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:புதுச்சேரி வந்த மத்திய குழு மழை பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்யவில்லை. முதல்வர் அனைத்து ரேஷன் கார்டுக்கும் ரூ.5 ஆயிரம் மழை நிவாரணமாக அறிவித்துள்ளார். அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.முதல்வர் ரங்கசாமி பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள், ரொட்டிபால் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். தீபாவளிக்கு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்றார். இவற்றை நடைமுறைப்படுத்தவில்லை.கடந்த காங்., ஆட்சியின் போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ரங்கசாமி, அதிகாரிகளுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என கூறினார். இப்போது முதல்வர் அதிகாரிகளுடன் இணக்கமாக இருக்கிறார். இன்று அவர் சொல்லும் வேலைகள் நடக்கிறதா? தலைமை செயலர் ஒத்துழைப்பு தரவில்லை என, அவரை மாற்ற வேண்டுமென உள்துறை அமைச்சர், செயலர், பிரதமர் அலுவலக கேபினெட் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுவரை தலைமை செயலர் மாற்றப்படவில்லை.எங்களுடைய ஆட்சியில் திட்டங்களை நிறைவேற்றினால் அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்பதால் ரங்கசாமி மத்திய அரசுக்கு சாதகமாக செயல்பட்டார். அது தற்போது அவரை திருப்பி அடிக்கிறது. புதுச்சேரியில் ரங்கசாமியின் அரசை முடக்கும் வேலையை மத்திய பா.ஜ.க., அரசு செய்து கொண்டிருக்கிறது.மாநில மக்கள் நலனில் மோடி அரசுக்கு அக்கறையில்லை. இதை முதல்வர் ரங்கசாமி புரிந்து கொள்ள வேண்டும். புதுச்சேரியில் மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்தால், ஏழைகள், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது தடைபடும். மின் விநியோகத்தை தனியார் மயமாக்குவதை முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும்.மழைக்கால நிவாரணம், தீபாவளிக்கு அறிவித்த அறிவிப்புகளை முதல்வர் எப்போது நிறைவேற்ற போகிறார் என, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு கூறினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X