மதிப்பெண் சான்றிதழ் பெற தனித் தேர்வர்களுக்கு அழைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2021
05:46

கடலுார்-மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் கடந்த 2014 முதல், 2018 வரையிலான பருவத்தில் பெற்றுக் கொள்ளாத மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். கடலுார் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலுார், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட எல்லைக்குட்பட்ட தனித்தேர்வு மையங்களில் மார்ச் 2014 முதல் செப்., 2018 வரையிலான பருவங்களில் மேல்நிலை இரண்டாமண்டு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. மதிப்பெண் சான்றிதழ் தேர்வு மையங்கள் மூலமாக தேர்வர்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட்டது. 2014ல் மார்ச், ஜூன், செப்.,- 2015ல் மார்ச், ஜூன், செப்.,-2016ல் மார்ச், ஜூன், செப்.,-2017ல் மார்ச், ஜூன், செப்.,-2018ல் மார்ச், ஜூன், செப்., ஆகிய பருவங்களில் தேர்வர்களால் பெற்றுக் கொள்ளப்படாத மதிப்பெண் சான்றிதழ் கடலுார் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உள்ளது. மதிப்பெண் சான்றிதழை வரும் 29ம் தேதி முதல் மூன்று மாதங்களுக்குள் இந்த அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். உரிய ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது ரூ. 45 மதிப்புள்ள அஞ்சல் வில்லைகள் ஒட்டிய சுய முகவரி எழுதிய உறையுடன் தேர்வரின் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம் மற்றும் தேர்வுக் கூட அனுமதி சீட்டின் நகலை இணைத்து மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X