உஷார்: மாவட்டத்தில் வேகமாக பரவும் காய்ச்சல்...சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2021
05:47

கடலுார்-மழை மற்றும் பருவ நிலை மாற்றம் காரணமாக கடலுார் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி, மருத்துவ மனைகளில் குவிந்து வருகின்றனர்.



கடலுார் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து, தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணிற்கு வந்துவிட்டது. டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடலுார் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 85 பேர் டெங்கு காய்ச்சலால் பாதித்தனர். தொடர்ந்து பாதிப்பு கண்டறியப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 9 பேர் டெங்கு பாதித்து கடலுார் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.



இந்நிலையில், மழை மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக, வைரஸ் காய்ச்சல் அசுர வேகத்தில் பரவி வருகிறது. மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருமல், சளி காய்ச்சலுடன் பாதிக்கப்படுவோர் நாள் தோறும் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகின்றனர்.கடலுார் அரசு மருத்துவ மனைக்கு மட்டும் தினமும் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். சில நாட்களில் 500 பேர் வரை வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதே நிலை உள்ளது. இதில் பலரை உள்நோயாளிகளாக சேர்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனியார் மெடிக்கல் கடைகளில் காய்ச்சல் என கூறி மாத்திரைகள் வாங்குவதும் அதிகரித்துள்ளது. வைரஸ் காய்ச்சலுக்கு அதிக அளவில் குழந்தைகள், சிறுவர்கள் பாதித்துள்ளனர். வடகிழக்கு பருவமழையால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பது, பருவநிலை மாற்றம், திறந்த வெளிகளில் போடப்படும் பொருட்களில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.



கடலுார் மாவட்டத்தில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதனால், அனைத்து பகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி, நோயை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மருத்துவ வல்லுனர்கள் கூறுகையில், சளி, இருமலால் பாதித்தவர்கள் இரும்பும் போதும், தும்மும்போதும் எதிரில் உள்ள மற்றவருக்கு கிருமிகள் பரவி வைரஸ் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.



எனவே, தலைவலி, மூட்டு வலி, சளி, இருமல், உடல் வலி ஆகிய பிரச்சனைகள் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் இருந்தால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து கொள்ள வேண்டும். வைரஸ் காய்ச்சல் பாதித்தவர்கள் கூட்ட நெரிசலாக உள்ள இடங்களுக்கு செல்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்தால் மற்றவர்களுக்கு பரவுவதை தவிர்க்க முடியும்.மேலும், குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும், வெளியில் சென்று வீடு திரும்பினால் கை, கால்கள் மற்றும் முகம் சுத்தம் செய்ய வேண்டும், சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருக்க வேண்டும் என, தெரிவிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X