2026ல் 'சிங்கப்பூராக' மாறுது 'சிங்கார சென்னை'! உலக வங்கி வழங்குகிறது ரூ.9,125 கோடி கடன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

27 நவ
2021
05:52
பதிவு செய்த நாள்
நவ 27,2021 05:47

'சென்னை மாநகர் கூட்டாண்மை' என்ற சி.சி.பி., திட்டத்தின் கீழ், உலக வங்கி, தமிழக அரசுக்கு 9,125 கோடி ரூபாய் கடன் அளிக்க உள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக, சென்னை மாநகராட்சி, பெருநகர வளர்ச்சி குழுமம், குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறைகளில், சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட நாடுகளை போல, சென்னை மாநகரின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது.



கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 2020 - 21 ஆண்டு பட்ஜெட் அறிக்கையில், சென்னை மாநகரம் நிலைத்தக்க பொருளதார வளர்ச்சி பெறுவதை உறுதி செய்யும் வகையில், உலக வங்கியின் ஆதரவுடன், 'சென்னை மாநகர கூட்டாண்மை' என்ற தனித்துவமான வளர்ச்சி திட்டம் துவங்கப்படும் என, அறிவித்தது. இத்திட்டத்தில், பெருநகர போக்குவரத்து, நீர் ஆதாரங்களின் தாங்குதன்மை, நகர நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை போன்ற கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன.


சென்னை மெட்ரோ ரயில், தெற்கு ரயில்வே, மாநகர போக்குவரத்து கழகம், சென்னை மாநகராட்சி மற்றும் மாநில நெடுஞ்சாலை துறைகளின் நகர்ப்புற போக்குவரத்து, உலக தரத்திற்கு மேம்படுத்தப்படும். குறிப்பாக, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மறுசீரமைக்கப்படும். அனைத்து துறைகள் மற்றும் போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைத்து, நிதி ஆதாரங்களை பகிர்ந்தளித்துவரும் அமைப்பாக, இது இருக்கும்.



நீர் ஆதாரங்கள்




நீர் ஆதாரங்களின் பிரிவில், வெள்ள பாதிப்பு மற்றும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்கும், குடிநீர் தேவையை நிறைவு செய்வதற்கும், ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும். நகர்ப்புற நிர்வாகம் மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகிய பிரிவுகளை, சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர வளர்ச்சி குழுமம் பங்குதாரர்களாக இணைந்து செயல்படும்.


சென்னை மாநகரின், சுகாதாரம், உணவு கட்டமைப்பு, வாகன போக்குவரத்து, தரமான குடிநீர், மழை நீர் வடிகால் கட்டமைப்பு, உலக தரத்திலான சாலைகள், திடக்கழிவு மேலாண்மை, கல்வி உள்ளிட்டவற்றை மேம்படுத்த, உலக வங்கியிடம் 9,125 கோடி ரூபாய் கடன் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. அதன்படி, சென்னையை உலக தரத்திலான மாநகராக உயர்த்துவதற்கு, சி.சி.பி., திட்டத்தின் கீழ், உலக வங்கி கடன் அளிக்கவுள்ளது.



இதுகுறித்து, சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில், நான்காவது பொருளதார வளர்ச்சிஉடைய நகரமாக சென்னை உள்ளது. சென்னை மாநகர், 1,189 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இங்கு, 1.09 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். சென்னையின் வளர்ச்சியை மேம்படுத்த, மாநகராட்சி வருவாய் நிதியுடன் மத்திய - மாநில அரசும் நிதி வழங்கி வருகிறது.



உலக வங்கி, ஜெர்மன் வளர்ச்சி வங்கி, ஆசிய வங்கிகளிடம் கடன் பெற்று, மழை நீர் வடிகால் கட்டமைப்பு, உலக தரத்தில் சாலைகள், நடைபாதைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை, சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர வளர்ச்சி குழுமம் உள்ளிட்ட துறைகள் மேற்கொண்டு வருகின்றன.


பல மடங்கு




இந்நிலையில், அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து, 'சென்னை மாநகர் கூட்டாண்மை' திட்டமான சி.சி.பி., செயல்படுத்தப்படுகிறது. இதில், சென்னை மாநகரில், உலக தரத்தில் மேம்பாட்டு வசதிகள் செய்யப்படும். இந்த பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெறும். வரும் 2026ம் ஆண்டுக்குள் மேம்பாட்டு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசு நிதி மற்றும் மத்திய அரசு நிதி என, பல்வேறு துறைகளை சார்ந்த வருவாய் நிதியில் இருந்து, 30 சதவீத பணிகள் முடித்த பின், உலக வங்கி 9,125 கோடி ரூபாயை வழங்கும்.



இத்திட்டம் முழுமை பெற்றால், சென்னையில் வாகன போக்குவரத்தால் ஏற்படும் மாசு பெருமளவு குறையும். மேலும், மழைநீர் தேங்குவது, குடிநீர் தட்டுப்பாடு போன்றவைகளும் இருக்காது. அனைவருக்கும் தரமான கல்வி, சுகாதாரம், பொது போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள், அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும். மேம்பட்ட மாநகராக மாறும்போது, உலக முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் வாயிலாக, சென்னை மாநகரின் வருவாய் பலமடங்கு அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.



- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (78)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-நவ-202121:37:22 IST Report Abuse
சாம் உலக வங்கிக்கு அறிவு இருக்கா இல்லையா??? ஊ ஊ தான்....
Rate this:
Cancel
Nesan - JB,மலேஷியா
27-நவ-202120:13:24 IST Report Abuse
Nesan உலக வங்கி இவர்களை நம்பி கடன்கொடுக்குது பாருங்க அதுதான் மிக வியப்பாக இருக்கு. நல்ல யோகம் அடித்திருக்கு அரசியல்வாதிகளுக்கும், அருமை அரசு அதிகாரிகளுக்கும்.. கோவிந்தா, கோவிந்தா ....
Rate this:
Cancel
Nesan - JB,மலேஷியா
27-நவ-202120:09:19 IST Report Abuse
Nesan சிங்கப்பூர் அரசு ஊழியர்கள், ஆட்சியாளர்களின் நாட்டு பற்று, மக்கள் நலனின் மேலுள்ள பற்று போன்ற நல்ல பண்புகளுடன் சென்னை ஆட்சியாளர்களை ஒருபோதும் ஒப்பிடவே முடியாது. உலக வங்கி வழங்குகிற ரூ.9,125 கோடி கடனில் கொள்ளை போவது எத்தனை கோடி என்று ஊர் அறிந்த ரகசியம். கொள்ளை அடிக்கத்தான் இவர்களுக்கு தெரியும், நல்லது ஒருபோதும் செய்யமாட்டார்கள். இது சத்தியம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X