மெட்ரோ பாதை பணிகளுக்கு 'டெண்டர்'; நடவடிக்கை துரிதம் | சென்னை செய்திகள் | Dinamalar
மெட்ரோ பாதை பணிகளுக்கு 'டெண்டர்'; நடவடிக்கை துரிதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 நவ
2021
05:54

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின், அனைத்து ஒப்பந்த நடவடிக்கைகளையும் 2022 மார்ச்சுக்குள் முடிக்கும் வகையில், பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.



சென்னையில், மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், 61 ஆயிரத்து, 843 கோடி ரூபாய் செலவில் மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது.மாதவரம் - சிறுசேரி சிப்காட், மாதவரம் - சோழிங்கநல்லுார், பூந்தமல்லி பை பாஸ் - கலங்கரை விளக்கம் இடையே மெட்ரோ பாதை மற்றும் நிலையங்கள் அமைக்க, பல பிரிவுகளாக ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இப்பாதைகளில், ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்ட பகுதிகளில், ஆரம்பகட்ட பணிகளும், சில இடங்களில் கட்டுமான பணிகளும் நடந்து வருகின்றன. இத்திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே, 45.8 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்படுகிறது. இதில், மாதவரம் - சி.எம்.பி.டி., வரை கட்டுமான பணிக்கு ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு, ஆரம்ப கட்ட பணி நடக்கிறது.

இப்பாதை பணிகள், பகுதி பகுதியாக, தனித்தனியாக ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.இப்பாதையில், நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பி.டி.சி., காலனி, ஓக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் - துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லுார் ஆகிய 10 மேம்பால நிலையங்கள் மற்றும் இந்நிலையங்கள் இடையே, 10 கி.மீ. மேம்பால மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்த ஏற்பாடு நடந்து வருகிறது.

இது குறித்து, மெட்ரோ திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:மெட்ரோ திட்ட பணிகளை விரைவாக முடிக்கவும், ஒப்பந்ததாரர்களால் பிரச்னை ஏற்படாமல் இருக்கவும் மூன்று பாதைகளுக்கும், பல பிரிவுகளாக ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்ட பாதை பணி மழையிலும் தொய்வின்றி நடந்து வருகிறது.

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், அனைத்து முக்கிய பணிகளுக்கும் ஒப்பந்ததாரர் நியமனம் வரும் டிசம்பருக்குள்ளும், மற்ற பணிகளுக்கு மார்ச் 2022க்குள்ளும் முழுதுமாக முடியும். அனைத்து ஒப்பந்த நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X