ஏரி உபரி நீர் ஊருக்குள் பாய்ந்து 200 குடும்பங்கள் தவிப்பு | சென்னை செய்திகள் | Dinamalar
ஏரி உபரி நீர் ஊருக்குள் பாய்ந்து 200 குடும்பங்கள் தவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 நவ
2021
05:57

பள்ளிக்கரணை : சென்னை, பள்ளிக்கரணை அணை ஏரி, பல கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. அந்த ஏரியின் உபரி நீர், நாராயணபுரம் ஏரிக்கு செல்ல, போக்கு கால்வாய் இருந்துள்ளது.

வழக்கமான ஆக்கிரமிப்பு காரணமாக, போக்கு கால்வாய் இருந்த இடம் தெரியாமல் போனது. இந்நிலையில் பருவ மழையால் ஏரி நிரம்பி இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த தொடர்மழை காரணமாக, பள்ளிக்கரணை செட்டிநாடு என்கிளேவ் பகுதியில் உள்ள, 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், மழை நீர் 3 அடி உயரம் சூழ்ந்தது.

அப்பகுதி மக்கள் வெளியே செல்ல முடியாமலும், வெளியே சென்றோர் வீட்டிற்குள் வர முடியாமலும் தவித்தனர். இத்தகவல் அறிந்து, மாநகராட்சி, தீயணைப்பு, காவல் துறையினர் விரைந்து, படகுகள் வாயிலாக பொதுமக்களை மீட்டனர்.இப்பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X