127 இடங்களில் மழை நீர் தேக்கம்; தி.நகரில் வேகமாக வெளியேறுதாம்! | சென்னை செய்திகள் | Dinamalar
127 இடங்களில் மழை நீர் தேக்கம்; தி.நகரில் வேகமாக வெளியேறுதாம்!
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 நவ
2021
05:58

சென்னை : வடகிழக்கு பருவமழை சென்னையில் பரவலாக பெய்து வருகிறது. அக்., 25ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை பெய்த மழையால், 1,128 இடங்களில் மழை நீர் தேங்கியது. பல இடங்களில், ஒரு வாரத்திற்கு பின், தேங்கிய நீர் அகற்றப்பட்டது. மழை நீர் தேங்கிய அனைத்து இடங்களிலும் அகற்றப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது.



சென்னை மாநகராட்சி எல்லையில், நேற்று பிற்பகல் வரை 4.6 செ.மீ., மழை பெய்துள்ள நிலையில், 127 இடங்களில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக, கடந்த முறை தேங்கிய தி.நகர், மாம்பலம், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கிஉள்ளது.இதில், 20க்கும் மேற்பட்ட இடங்களில் உடனடியாக அகற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள இடங்களில், 131 மோட்டார் பம்புகள் வாயிலாக அகற்றப்பட்டு வருகிறது.

மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது:சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில், முன்பை விட தற்போது நீர் வெளியேறும் வேகம் அதிகரித்துள்ளது. விட்டு விட்டு கனமழை பெய்வதால், குறிப்பிட்ட இடங்களில் மழைநீர் தேங்கிஉள்ளது. தி.நகர், மாம்பலம் பகுதியில் தேங்கிய நீர், முன்பை விட 60 சதவீதம் வேகமாக வெளியேறுகிறது.

புளியந்தோப்பு பகுதிகளிலும், மழைநீர் வெளியேறுவதற்கான வழிகள் ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளதால் ஓரிரு நாட்களுக்கு மேல் நீர் தேங்காது. இதற்காக, 847 மோட்டார் பம்புகள், 46 ஜே.சி.பி.,கள், தேவையான பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X