சென்னை : தொழில் பங்குதாரர்களுக்கு தெரியாமல், கட்டுமான நிறுவனத்தில் 1 கோடி ரூபாய் திருடிய பொறியாளரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை தேனாம்பேட்டையில், 'மேக்ஸ் வேல்யூ ஹவுசிங்' என்ற கட்டுமான நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தை தேவி என்பவர் நடத்தி வருகிறார். பங்குதாரராக பொறியாளர் கதிர் அகமது, 57, என்பவர் இருந்தார். இவர், 2011 - 16 வரை தேவிக்கு தெரியாமல், காசோலை வாயிலாக 1 கோடி ரூபாய் திருடி உள்ளார்.இதுகுறித்து தேவி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, கதிர் அகமதுவை நேற்று கைது செய்தனர்.