சென்னை : சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக செய்திக்குறிப்பு:
கோடம்பாக்கம், ரங்க ராஜபுரம் இரு சக்கர வாகன சுரங்கப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது
கே.கே.நகர், ராஜமன்னார் சாலையில், போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் 2வது அவென்யூவில் திருப்பி விடப்படுகிறது
வளசரவாக்கம் மெகா மார்ட் அருகே போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் ஆற்காடு சாலை செல்ல, கேசவர்த்திணி சாலை நோக்கி திருப்பி விடப்படுகிறது
தி.நகரில், வாணி மஹால் முதல் பென்ஸ் பார்க் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் அபிபுல்லா சாலை மற்றும் ராகவையா சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.