ரூ.32.16 லட்சம் தங்கம் பறிமுதல் | சென்னை செய்திகள் | Dinamalar
ரூ.32.16 லட்சம் தங்கம் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 நவ
2021
06:11

சென்னை : மரத்துாளில் மறைத்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 32.16 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



ஐக்கிய அமீரக அரபு நாடான ஷார்ஜாவிலிருந்து, ஏர் அரேபியா விமானம், நேற்று சென்னை வந்தது. அதில் வரும் பயணியர் இருவர் தங்கம் கடத்தி வருவதாக, சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்படி, சந்தேகப்படும் வகையில் வந்த இரு பயணியரின் உடைமைகளை சோதனை செய்த போது, அட்டைப் பெட்டிக்குள் மரத்துாள் 'பார்சல்' இருந்தது.அதை பிரித்துப் பார்த்த போது, 32.16 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 745 கிராம் எடையுள்ள தங்கம் இருந்தது. அதை பறிமுதல் செய்து, அதிகாரிகள் மேலும் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X