சென்னை : மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும், 616 பேர் மீட்கப்பட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக வண்ணாரப்பேட்டை, வில்லிவாக் கம், மாதவரம் பால்பண்ணை, செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போரை மீட்க, போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அடங்கிய, 13 மீட்பு குழுக்களை, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உருவாக்கி உள்ளார்.இக்குழுவினர் நேற்று மாலை, 6:00 மணி நிலவரப்படி, 616 பேரை மீட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.