கொடுங்கையூர் : கொடுங்கையூரில், சாக்லெட் வாங்கிக் கொடுத்து, பிளஸ் டூ மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை, 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொடுங்கையூர், ஆர்.வி., நகரைச் சேர்ந்தவர் உமாசங்கர், 32. இவர், அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் டூ படிக்கும், 16 வயது மாணவி, டியூஷனுக்கு வரும் போது, அவரிடம் பேசிப் பழகி, சாக்லெட் வாங்கிக் கொடுத்து, வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோரிடம் கூறியதால், எம்.கே.பி., நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், உமாசங்கர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து அவரை 'போக்சோ'வில் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.