தக்காளி வாகனம் நிறுத்த இடம்: பதிலளிக்க உத்தரவு | சென்னை செய்திகள் | Dinamalar
தக்காளி வாகனம் நிறுத்த இடம்: பதிலளிக்க உத்தரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 நவ
2021
06:12

சென்னை : சென்னை உயர் நீதிமன்றத்தில், தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர் சுவாமிநாதன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கை, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் நேற்று விசாரணைக்கு எடுத்தார். வழக்கறிஞர் கே.சிவகுமார் ஆஜராகி, ''தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை, வெளிமாநிலங்களில் இருந்து இங்கு எடுத்துவரவில்லை என்றால், விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது.''அதனால், 84 சென்ட் காலியிடத்தை, சிறப்பு ஏற்பாடாக தற்சமயம் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.

இதற்கு பதில் அளிக்க, சி.எம்.டி.ஏ., தரப்பு வழக்கறிஞர் வீணா சுரேஷ்; மார்க்கெட் மேலாண்மை குழுவின் வழக்கறிஞர் வேல்முருகன் அவகாசம் கோரினர்.இதையடுத்து, விசாரணையை, வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைத்து, மார்க்கெட் கமிட்டி பதில் அளிக்க, நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X