நகை வாங்குவது போல் நடித்து ரூ.1.80 லட்சம் செயின் 'அபேஸ்' | சென்னை செய்திகள் | Dinamalar
நகை வாங்குவது போல் நடித்து ரூ.1.80 லட்சம் செயின் 'அபேஸ்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 நவ
2021
06:13

வளசரவாக்கம் : வளசரவாக்கத்தில் பிரபல நகைக்கடையில், நகை வாங்குவது போல் நடித்து, 1.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செயின்களை பறித்துச் சென்ற மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

வளசரவாக்கத்தில் உள்ள, ஒரு பிரபல நகைக்கடைக்கு, நகை வாங்குவது போல், 'டிப்டாப்' நபர் ஒருவர், நேற்று முன்தினம் வந்துள்ளார்.அவர், 3 சவரன் செயின் கேட்டுள்ளார். கடை ஊழியர்கள் செயின்களை எடுத்துக் காண்பித்து உள்ளனர்.பல மாடல்களை பார்த்த மர்ம நபர், மூன்று செயின்களை எடுத்து வைத்து, வீட்டில் உள்ளவர்களிடம் காண்பித்து விட்டு வாங்கிக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த நபருடன், கடை ஊழியர் ஒருவர் நகைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினார். வெளியே சென்றதும், 'டிப்டாப்' நபர் இருசக்கர வாகனத்தை 'ஸ்டார்ட்' செய்துள்ளார். வாகனத்தில் கடை ஊழியர் ஏற முயன்ற போது, அவரிடம் இருந்த நகைகளை பறித்துக் கொண்டு, கீழே தள்ளிவிட்டு, மர்ம நபர் தப்பினார்.

இது குறித்து, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர். அந்த நகைகளின் மதிப்பு, 1.80 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X