தேர்தல் நேரத்தில் தான் பெண்களுக்கு மதிப்பு: சிவகாமி | சென்னை செய்திகள் | Dinamalar
தேர்தல் நேரத்தில் தான் பெண்களுக்கு மதிப்பு: சிவகாமி
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 நவ
2021
06:14

சென்னை : ''தமிழகத்தில் பெண்கள் இன்று வரை சொந்தமாக அரசியல் செய்வதில்லை; ஓட்டு போடும் நேரத்தில் மட்டும் தான் அவர்களுக்கு மதிப்பு அளிக்கப்படுகிறது,'' என, சமூக சமத்துவ படை கட்சி தலைவரும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சிவகாமி தெரிவித்தார்.

அகில இந்திய எஸ்.சி., -- எஸ்.டி., கூட்டமைப்பு மகா சம்மேளனம் தமிழகம் சார்பில், ஒற்றுமையே தலைநிமிர்வு என்ற தலைப்பில் தேசிய மாநாடு, சென்னை, நுங்கம்பாக்கத்தில் நேற்று நடந்தது.இதில், சமூக சமத்துவ படை கட்சி தலைவரும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சிவகாமி பேசியதாவது:சகோதரத்துவம் இல்லாமல் சுதந்திரம் சாத்தியமே இல்லை. இது எல்லாவற்றுக்கும் அடிப்படை. தமிழகத்தில் பெண்கள் இன்று வரை அரசியல்படுத்தப்படவில்லை.

அவர்கள் சொந்தமாக அரசியல் செய்வது இல்லை. அவர்கள் எல்லாருக்கும் காவடி துாக்குபவர்களாக உள்ளனர். அவர்களுக்கு மதிப்பு கிடையாது.ஓட்டு நேரத்தில் மட்டும் தான் பெண்களுக்கு மதிப்பு கிடைக்கிறது. உள்ளாட்சியில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு இருப்பதால் இன்று பெண்களை அழைத்து 'சீட்' தருகின்றனர். இப்படி சட்டசபையில் உள் ஒதுக்கீடு இருந்திருந்தால், பெண்களுக்கும் அதிக சீட்டை நிர்ணயம் செய்வர். தி.மு.க.,. உட்பட எந்த ஒரு கட்சியும் பெண்களுக்கு அதிக சீட் தருவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

சம்மேளன தலைவர் உதித்ராஜ், வி.சி., தலைவர் திருமாவளவன், காங்., - செல்வபெருந்தகை, ஓய்வுபெற்ற கூடுதல் தலைமை செயலர் கிறிஸ்துதாஸ் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X