மருதம் ஏரி கால்வாய் மீது 'சிமென்ட் சிலாப்' அவசியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2021
06:39

வாலாஜாபாத் : மருதம் கிராம ஏரி பாசன கால்வாய் மீது, சிமென்ட் சிலாப் போடாததால், வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில், பயணம் செய்ய வேண்டி உள்ளது.



வாலாஜாபாத் அடுத்த, மருதம் கிராமத்தில் பொதுப்பணித் துறை ஏரி உள்ளது. 2015 கன மழையில், ஏரியின் பிரதான நீர் பாசன மதகு மற்றும் கரை உடைந்தது.இதையடுத்து பொதுப்பணித் துறையினர் புதிய மதகு மற்றும் தார் சாலை குறுக்கே, பாசன கால்வாய் கட்டினர். அதன் மீது சிமென்ட் சிலாப் ஏற்படுத்தவில்லை.



இதனால், மருதம் கிராமத்தில் இருந்து, புத்தகரம், ஊத்துக்காடு வழியாக வாலாஜாபாத் செல்வோர், ஏரிக்கரை மீது ஆபத்தான முறையில் பயணிக்க வேண்டி உள்ளது. சில நேரங்களில், மதகில் இருந்து தவறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து மருதம் விவசாயிகள் கூறியதாவது:



எங்களுக்கு சொந்தமான விவசாய நிலம், புத்தகரம் கிராமத்தைச் சுற்றி இருக்கிறது. டிராக்டரில் உரம் மற்றும் பிற வேளாண் இடுப்பொருட்களை எடுத்து செல்வதற்கு, மருதம்- - புத்தகரம் ஏரிக்கரை சாலை சவுகரியமாக இருந்தது.ஐந்து ஆண்டுகளாக, பாசன கால்வாய் குறுக்கே, சிமென்ட் சிலாப் போடாததால், வாகனங்களை, வயல்களுக்கு எடுத்து செல்ல முடியாத நிலை இருக்கிறது.சம்பந்தப்பட்ட துறையினர், சிமென்ட் சிலாப் போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X