படித்தாலே கூடுதல் திறமை போட்டி தேர்வுக்கு வலிமை; தினமலர் ஆல்பத்தை கண்டு நெகிழ்ந்த மாணவிகள் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
படித்தாலே கூடுதல் திறமை போட்டி தேர்வுக்கு வலிமை; தினமலர் ஆல்பத்தை கண்டு நெகிழ்ந்த மாணவிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 நவ
2021
06:58


அருப்புக்கோட்டை : இன்றைய நவீன உலகில் கல்லுாரி மாணவர்கள் பலவித சவால்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது. படிப்பு மட்டுமல்லாது கூடுதலாக தங்கள் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. பொது அறிவு, பாடம் சம்பந்தமாக விலை கொடுத்து புத்தகங்களை வாங்குகின்றனர்.

முடியாதவர்கள் நுாலகங்கள் சென்று படிக்க வேண்டியுள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்ய தம்மால் ஆன உதவிகளை செய்ய வேண்டும் என அருப்புக்கோட்டை ஜெயராம் நகரை சேர்ந்த மருத்துவ துறையில் நிர்வாக அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற ஜெயச்சந்திரன் முடிவு செய்தார்.

இவர் தினமலர் நாளிதழின் நீண்ட கால வாசகர். தினமலர் நாளிதழில் வரும் செய்திகள், கட்டுரைகள் ஒன்று விடாமல் படிப்பவர். தினமலர் நாளிதழில் மாணவர்களுக்கு தேவையான பயனுள்ள, போட்டி தேர்வுகளுக்கான தகவல்கள் வெளி வருவதையடுத்து இதன் தகவல்களை சேகரித்து ஆல்பமாக தயார் செய்துள்ளார்.இவரிடம் உள்ள 10 க்கு மேற்பட்ட மெகா

ஆல்பங்களில் பல்வேறு கலெக் ஷன்கள் உள்ளன. கல்வி, அரசியல், ராணுவம், கலை, பொது, மாநில,மாவட்ட பிரச்னைகள், சினிமா, இசை, அறிவியல் தொகுப்புகள் என வரிசை கட்டி உள்ளன. இவற்றை போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படித்தால் நிச்சயம் வெற்றிதான் என உறுதிபட கூறுகிறார் ஜெயச்சந்திரன் . இந்த ஆல்பங்களை பல்வேறு

பள்ளிகள் கல்லுாரிகளுக்கு சென்று மாணவர்கள் பார்வைக்கு வைக்கிறார்.அந்தவகையில் அருப்புக்கோட்டை ஸ்ரீ ரமணாஸ் மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் தினமலர் ஆல்பங்களை காட்சி படுத்தி உள்ளார். ஆல்பங்களை ஆர்வத்துடன் படித்த மாணவிகளின் உற்சாக பதில்கள் இதோ...பயனுள்ள தகவல்கள்விநோதினி: தினமலர் ஆல்பங்களை

பார்வையிட்டதில் அனைத்து தலைப்புகளிலும் வந்துள்ள விதவிதமான கட்டுரைகள் எங்களுக்கு பயனுள்ள தகவல்கள் . இவற்றை படித்தாலே போட்டி தேர்வுகளை எளிதில் எழுதி வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணம் எழுந்தது. மிகவும் பயனுள்ள தகவல்கள்.பாதுகாக்க வேண்டிய ஆவணம்முபாரக் ரிஸ்வானா: நாளிதழை படித்து பாதுகாக்கப்பட வேண்டிய

ஆவணமாக உள்ளது. அத்தகைய அரிய தகவல்கள் உள்ளன. தினமலர் நாளிதழ் முக்கிய கட்டுரைகள், செய்திகளை தினம் தினம் படித்து சேர்த்து வைத்தாலே போட்டி தேர்வுகளை எளிதில் எதிர் கொள்ளலாம். தினமலர் நாளிதழில் அதிக பயனுள்ள தகவல்கள் வெளி வருகிறது.படித்தாலே தனி திறமை கூடுதுரேணுகா தேவி: தினமலர் நாளிதழில் வெளி வரும்

பொது அறிவு, அறிவியல் ஆயிரங்கள், தகவல் சுரங்கம், என் பார்வை போன்ற தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் கிடைக்கிறது. தினமும் படிப்பதால் மாணவர்களுடைய தனி திறமைகள் கூடுகிறது. போட்டி தேர்வுகளுக்கு எளிதில் வெற்றி கொள்ளலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. தினமலர் ஆல்பங்களை பார்க்க ஏற்பாடு செய்த நிர்வாகத்திற்கு

நன்றி.ஆர்வத்தில் மாணவிகள்ஜெயச்சந்திரன், தினமலர் ஆல்பம் சேகரிப்பாளர்: நான் ஓய்வு பெற்ற பின் மாணவர்கள் போட்டி தேர்விற்கு தயாராக இருக்க ஏதாவது செய்ய நினைத்தேன். நான் தினமலர் நாளிதழின் நீண்ட கால வாசகன்.இதில் வரும் பல்வேறு செய்திகளை ஆல்பங்களாக செய்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட, 20 க்கு மேற்பட்ட பல்வேறு தலைப்புகளில் ஆல்பங்களாக தயாரித்து மாணவர்களுக்கு காண்பித்து வருகிறேன்.

மாணவிகளும் ஆர்வத்துடன் ஆல்பங்களை பார்த்தனர். நாங்களும் இதுபோன்று தயார் செய்கிறோம் என உற்சாகத்துடன் கூறினர்.பயனுள்ள நிகழ்ச்சிடாக்டர் இளங்கோவன், கல்லுாரி செயலர்: கல்லுாரியில் பல்வேறு நிகழ்ச்சிகளை மாணவர்களுக்காக நடத்துகிறோம். இந்த தினமலர் ஆல்பம் நிகழ்ச்சி புதுமையாகவும், மாணவர்களை போட்டி தேர்விற்கு

தயாராக நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சியாக இருந்தது. பல்வேறு தலைப்புகளில் பல்வேறு செய்திகளை மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்தனர். பல்வேறு தகவல்களை தொடர்ந்து வெளியிடும் தினமலர் நாளிதழுக்கும் ஆல்பங்களை தொகுத்து வழங்கிய ஜெயச்சந்திரனுக்கும் வாழ்த்துக்கள்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X