நீரின்றி 25 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் தடுப்பணை: செய்தித்துறை அமைச்சரின் தொகுதியில் விவசாயிகள் ரத்தக்கண்ணீர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2021
12:36

காங்கேயம்: தமிழகம் முழுவதும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கிய நிலையில்,பெரும்பாலான குளம் குட்டைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. அதேபோல் அனைத்து சிறிய பெரிய அணைகளும் நீர் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 25ஆண்டுகளாக ஒரு சொட்டு தண்ணீர் கூட இன்றி வறண்டு கிடக்கும் தடுப்பணை ஒன்று தமிழக செய்தித்துறை அமைச்சரின் காங்கயம் தொகுதியில் உள்ளது.




திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள தாசநாயக்கன் பட்டியில் வட்டமலைக் கரை தடுப்பணை கடந்த 1980 ல் வட்டமலை ஓடையை தடுத்து ரூ.4.5 கோடி ரூபாய் செலவில், 24 அடி உயரத்துக்கு நீர் தேங்கி 0.45 டி.எம்.சி தண்ணீர் இருப்பு வைக்கும் வகையில்,கட்டி முடிக்கப்பட்டது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்தில் இருந்து கிடைக்கும் கசிவு நீர் மற்றும் பிஏபி பாசனத்திற்கு விடப்பட்டது போக மீதமாக உபரி நீர் இருந்தால்,வினாடிக்கு 250 கன அடி வீதம் பல்லடம் அருகே உள்ள கள்ளிபாளையம் மதகு வழியாக திறக்க அரசாணையும் வெளியிட்பட்டது.

வட்டமலைக்கரை தடுப்பணைக்கு நீர்பிடிப்பு பகுதிகளாக சுமார் 426 சதுர மைல் பரப்பளவு உள்ளது. முக்கிய நீராதார ஓடைகள் பல்லடம், அனுப்பட்டி,உகாயனூர்,செஞ்சேரிப்புதூர்,கேத்தனூர்,கொடுவாய்,நிழலி பகுதிகளில் உள்ள ஓடைகள் மற்றும் பிஏபி பாசனத்தில் கிடைக்கும் கசிவு நீர் அனைத்தும் மூன்று ஓடைகள் வழியாக வந்து பங்கம்பாளையம் அருகே ஒன்றாக கலந்து வட்டமலை ஓடையாக மாறுகிறது.


இதன் பின் இந்த தண்ணீர் வட்டமலை தடுப்பணைக்கு வந்தடையும்.ஆனால் கடந்த 1996 க்கு பின் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.

அணைக்கு நீர் வரும் ஓடைகளில் 65 சிறிய செக்டேம்கள் கட்டியதால் கடந்த 25 ஆண்டுகளாக நீர் வரத்தின்றி ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் காய்ந்து சீமைக் கருவை முள் காடாக காட்சி அளிக்கிறது.வட்டமலை இடது வலது கரை வாய்க்கால் மூலம் 6050 ஏக்கர் நிலம் உள்ள நிலையில்,இறுதியாக 1996 ல் தண்ணீர் திறக்கப்பட்டு பாசனத்துக்கு சென்றதாகவும், பின்னர்அணை வறண்டே கிடப்பதாக வட்டமலைக்கரை அணை பாசன விவசாயிகள் கூறுகின்றனர்.




இந்நிலையில்,பிஏபி அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ள நிலையில், தற்போது உபரி நீர் திறக்கப்பட்டு வீணாக கேரள மாநிலத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.
மேலும் திருமூர்த்தி அணை மூலம் செயல் படுத்தப்ப டும் பிஏபி பாசன பரப்பில் அனைத்து சுற்றுகளுக்கும் போதுமான நீர் வழங்கப்பட்டு விட்ட நிலையில்,திருமூர்த்தி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் இந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக அணை நிரம்பும் நிலையில் உள்ளதால்,உபரி நீர் வெளியேற்றும் வகையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் பிஏபி தொகுப்பணைகளில் இறுதி அணையாக கருதப்படும் தாராபுரம் உப்பாறு அணையும் 20 ஆண்டுக்கு பின் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.


இதனால் 1998ல் போடப்பட்ட அரசாணையின் படி வட்டமலை அணைக்கு பல்லடம் அருகே உள்ள கள்ளிபாளையம் மதகில் இருந்து நீர் திறக்க வேண்டும் என செய்ததித்துறை அமைச்சர் சாமிநாதனின் சொந்த தொகுதி மக்களும் விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் தற்போது அனைத்து அணைகளிலும் போதிய நீர் இருப்பு உள்ளதால், கள்ளிபாளையம் மதகில் இருந்து நீர் வட்டமலைகரை அணைக்கு இன்றோ நாளையோ நீர் திறந்தாலும்,கள்ளிபாளையம் முதல் வட்டமலை வரை நீர் வரத்து ஓடையில் கட்டப்பட்டுள்ள 23 தடுப்பணைகளும் நிரம்பி 46.35 கிலோமீட்டர் பயணித்து வர ஒரு வாரம் ஆகும். எனவே சொந்த தொகுதி மக்களின் 25 ஆண்டு கால தண்ணீர் தவத்தை அமைச்சர் சாமிநாதன் நிறைவேற்றுவாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லுமோ,,???

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-நவ-202119:59:46 IST Report Abuse
Gopalakrishnan S தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் போது, இருபத்து மூன்று தடுப்பணைகள் நிரம்பவில்லை .... வாழ்க வளமுடன் !
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X