பெண்ணுக்கு மிரட்டல் சென்னை போலீஸ் கைது | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பெண்ணுக்கு மிரட்டல் சென்னை போலீஸ் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 நவ
2021
22:50

பொள்ளாச்சி: பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த சென்னை ஆயுதப்படை போலீசை, மகளிர் போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி மகளிர் போலீசார் கூறியதாவது:சென்னையில் ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றும் நேசமணிக்கும்,31, பொள்ளாச்சியைச்சேர்ந்த, 27 வயது பெண்ணுக்கும், சமூக வலைதளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டு, நான்கு ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.கடந்த மாதம் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது.ஆனால் நேசமணி, காதலிக்கும் போது பெண்ணுடன் எடுத்த போட்டோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, திருமணம் செய்தாலும் என்னுடன் வாழ வேண்டும் என மிரட்டியுள்ளார்.இது குறித்து, பெண் கொடுத்த புகாரின் பேரில், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தனிப்படை அமைத்து சென்னையில், ஆயுதப்படை போலீஸ் நேசமணியை, கைது செய்து அழைத்து வந்து விசாரிக்கிறோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X