வெளிநாடுகளில் நேரடி கண்காட்சி துவங்குகிறது! வர்த்தகத்தை வசப்படுத்த அழைக்கிறது ஏ.இ.பி.சி.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2021
23:07



திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், அடுத்தடுத்த நான்கு கண்காட்சிகளில் பங்கேற்று, வர்த்தகத்தை வசப்படுத்த ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர், புதிய வர்த்தக சந்தைகளை கைப்பற்ற, வெளிநாடுகளில் நடைபெறும் கண்காட்சிகள் கைகொடுக்கின்றன.தாங்கள் உற்பத்தி செய்யும் புதுமையான ஆடை ரகங்களை கண்காட்சிகளில் இடம்பெறச்செய்து, வர்த்தகர்களிடமிருந்து, மொத்த ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்களை கைப்பற்றுகின்றனர்.கொரோனா தொற்று காரணமாக, இரண்டு ஆண்டுகளாக, நேரடி கண்காட்சிகள் நடத்தப்படவில்லை; சர்வதேச கண்காட்சிகள், மெய்நிகர் தொழில்நுட்பத்தில் நடத்தப்பட்டன.

தற்போது, கொரோனா பரவல் குறைந்துள்ளது. இதனால், வெளிநாடுகளில், நேரடி ஆயத்த ஆடை கண்காட்சிகள் துவங்கியுள்ளன. அந்தவகையில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் நாடுகளில் அடுத்தடுத்து கண்காட்சிகள் நடைபெற உள்ளன.ஆர்டருக்கு வாய்ப்புவட அமெரிக்காவின் பிரசித்திபெற்ற மேஜிக் பேர் கண்காட்சி, லாஸ்வேகாஸ் நகரில், வரும் 2022, பிப்., 13ல் துவங்கி 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. 1,600க்கும் ஏற்றுமதி நிறுவனங்கள், தங்களது ஆயத்த ஆடை ரகங்களை காட்சிப்படுத்த உள்ளன.

உலக அளவில், 40க்கும் மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான வர்த்தகர்கள் பங்கேற்று, ஆர்டர் வழங்குவதற்கான விசாரணைகள் நடத்த உள்ளனர்.l இந்திய ஆடை ஏற்றுமதிக்கு, பாரம்பரிய சந்தையாக பிரிட்டன் உள்ளது. ஐரோப்பாவில் இருந்து பிரிந்துள்ளதையடுத்து, அந்நாட்டுக்கான ஏற்றுமதியை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன.'பியூர் லண்டன் பேர்' என்ற பெயரில், ஆயத்த ஆடை கண்காட்சி, வரும் 2022, பிப்., 6 முதல் 9ம் தேதி வரை நடக்கிறது. பிரிட்டன் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளைச்சேர்ந்த, சர்வதேச பிரான்டட் ஆடை வர்த்தகர்கள், பங்கேற்க உள்ளனர்.l 'கூஸ் நெக்ஸ்ட் பேர் பாரீஸ்' கண்காட்சி, வரும் ஜன., 21ம் தேதி, பிரான்ஸ் நாட்டில் துவங்குகிறது; 24ம் தேதி வரை நடக்கிறது. நுாற்றுக்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், பிரான்டட் நிறுவனத்தினர் கண்காட்சியை பார்வையிட்டு, வர்த்தக விசாரணை நடத்துகின்றனர்.l தி ஜப்பான் இந்தியா இன்டஸ்ட்ரி புரமோஷன் அசோசியேஷன் (ஜிப்பா) சார்பில், 'இந்தியா டெக்ஸ் டிரென்ட்' கண்காட்சி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், வரும் 2022, பிப்., 14ல் துவங்கி, 16ம் தேதி வரை நடக்கிறது.இந்தியா - ஜப்பான் இடையே பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதால், இந்திய ஆயத்த ஆடை ரகங்களை, வரியின்றி, இறக்குமதி செய்யலாம். இக்கண்காட்சியில் பங்கேற்பதன்மூலம், ஜப்பான் சந்தைக்கான ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிக்க முடியும்.மேற்கண்ட நான்கு கண்காட்சிகளிலும், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்று, ஆடை ரகங்களை காட்சிப்படுத்த, ஏ.இ.பி.சி., ஏற்பாடு செய்துள்ளது. புதிய சந்தை வாய்ப்புக்களை தேடும் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், கண்காட்சிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.விவரங்களுக்கு, 0421 2232634, 94422 89222 என்ற எண்ணில் ஏ.இ.பி.சி., அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.கொரோனா பரவல் குறைந்துள்ளதால், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ்,ஜப்பான் நாடுகளில், நேரடி ஆயத்த ஆடை கண்காட்சிகள் துவங்கியுள்ளன.இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதிநிறுவனங்கள் பங்கேற்று, ஆடை ரகங்களை காட்சிப்படுத்த, ஏ.இ.பி.சி., விரிவானஏற்பாடுகளை செய்துள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X