மாவட்ட ஊராட்சி நிர்வாகம் உறங்குது: இனியாவது, கலெக்டர்  கவனிக்கலாமே! | திருப்பூர் செய்திகள் | Dinamalar
மாவட்ட ஊராட்சி நிர்வாகம் உறங்குது: இனியாவது, கலெக்டர்  கவனிக்கலாமே!
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 நவ
2021
23:27



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழு செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு, விதிமுறையை பின்பற்றி முழுமையாக இயங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்ட ஊராட்சி பிரிவு, கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. மாவட்ட குழு தலைவராக, அ.தி.மு.க., வை சேர்ந்த சத்தியபாமாவும், துணை தலைவராக, சிவகாமியும் பொறுப்பு வகிக்கின்றனர். கடந்த காலங்களில், மாநில அளவில் விருது பெறும் அளவுக்கு, மாவட்ட ஊராட்சி குழு சிறப்புடன் செயல்பட்டது.மாவட்ட திட்டக்குழுவாக செயல்படும், மாவட்ட ஊராட்சி குழு, முறையாக செயல்படுகிறதா என்று, தனியாக தணிக்கை நடத்த வேண்டிய நிலை உருவாகி விட்டது.
அ.தி.மு.க., 'மெஜாரிட்டி'யாக இருப்பதால், பெயர் அளவுக்கு கூட்டம் நடத்தி, சத்தமின்றி முடிக்கப்படுகிறது.மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பங்கேற்று, மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதித்த காலம் மலையேறிவிட்டது. கடந்த, 2020ம் ஆண்டு ஜன., மாதத்தில் இருந்து, மாவட்ட குழு செயல்படுகிறதா? மாவட்ட ஊராட்சி வார்டு வாரியாக நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் நடக்கிறதா என்பது, யாருக்கும் தெரியவில்லை.கொரோனாவை காரணம் காட்டி, அரசுத்துறையினர், பத்திரிகையாளர் இல்லாமல், பெயர் அளவுக்கு கூட்டம் நடத்தியதாக, பதிவு மட்டுமே நடந்து வருகிறது.இதுகுறித்து ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது:மாவட்ட ஊராட்சி குழுவில் இருந்து, வார்டுக்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டு, பின்தங்கிய பகுதிகளில், அடிப்படை வசதி செய்யப்பட்டது. கடந்த, ஒன்றரை ஆண்டுகளாக, எவ்வித பணியும் நடப்பதாக தெரியவில்லை.மாவட்ட ஊராட்சி குழு நிர்வாகிகள், தன்னிச்சையாக செயல்படுகின்றனர்; மாவட்ட கவுன்சிலர்களும் கண்டுகொள்வதில்லை. மாவட்ட ஊராட்சி குழுவுக்கு, தமிழக அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு, மேற்கொண்ட பணிகள் என்ன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.மாவட்ட நிர்வாகம், இதுகுறித்து சிறப்பு கவனம் எடுத்து, மாவட்ட ஊராட்சி குழு, விதிமுறைகளை பின்பற்றி, முறையாக இயங்க அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X