16 ஆண்டுக்கு பின், நிரம்பிய உப்பாறு அணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2021
23:42

திருப்பூர்: உப்பாறு அணை, முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், இடது - வலது வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகாவில் உள்ள, உப்பாறு அணை, 25 அடி உயரத்தில், 575 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இடது வாய்க்காலில், 3,100 ஏக்கர்; வலது வாய்க்காலில், 2,650 ஏக்கர் என, 5,750 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் கட்டமைக்கப்பட்டது.பி.ஏ.பி.,உபரி நீரை தேக்கும் வகையில் கட்டிய அணைக்கு, பல ஆண்டுகளாக தண்ணீர் கிடைக்கவில்லை; பருவமழையை மட்டுமே நம்பியிருக்கிறது. தற்போது, வடகிழக்கு பருவமழை கருணை காட்டியதால், 24 அடி உயரமுள்ள அணை நிரம்பியது.

அணையின் பாதுகாப்பு கருதி, எந்நேரமும், அணை திறக்கப்படலாம் என, கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து, வினாடிக்கு 950 கனஅடி உபரிநீர் வெளியேறி வருகிறது.தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து கூறியதாவது:கடந்த, 16 ஆண்டுகளுக்கு பின், உப்பாறு அணை நிரம்பியுள்ளது. பருவமழை பெய்து கொண்டிருக்கும் போது, 2 ஆயிரம் கன அடியாக துவங்கும் நீர்வரத்து, சில மணி நேரத்தில், 200 கன அடியாக குறைந்து விடுகிறது.மழை பெய்யாத போது அணைக்கு தண்ணீர் கிடைக்காது. எனவே, இடது மற்றும் வலது வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து, பாசன பகுதியில் உள்ள, குளம், குட்டைகளை நிரப்பலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X