அரசு பஸ்களில் அவலம்: அபாய பயணம் தொடர்கிறது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2021
23:57

ஊட்டி: நீலகிரி மாவட்ட அரசு பஸ்களுக்கான உதிரி பாகங்கள் இல்லாமல் அவதிஅடைந்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் அரசு போக்குவரத்து கிளைகள் மூலம், 270 வழித்தடத்தில், 320 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதில், கடந்த, 10 ஆண்டுக்கு மேலாக இயக்கப்படும், 40 சதவீதம் பஸ்கள் மற்றும் கடந்த ஐந்தாண்டில் புதிதாக இயக்கும், 60 சதவீத பஸ்களுக்கு உதிரி பாகங்கள் கிடைக்காமல் பழுது அதிகரிக்கிறது.பஸ்களில் அன்றாடம் பயன்படுத்தும், பிரேக் லைனர், டிரம், ஸ்பிரிங் கட், இன்ஜின் ஆயில், ஸ்பேர் டயர் உள்ளிட்ட குறைபாடுகள் குறித்து அலுவலக பதிவேட்டில் எழுதி தெரிவித்தும் மாத கணக்கில் சரி செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

பழுதடைந்த பஸ்களில், பயணியர் ஆபத்துடன் பயணம் செய்யும் அவலம் உள்ள நிலையில், அதிகாரிகளின் நிர்பந்தத்தால் பஸ்கள் இயக்குவதாக டிரைவர், கண்டக்டர்கள் தெரிவிக்கின்றனர். புதிய பஸ்கள் உட்பட, 70 சதவீத பஸ்களின் மேற்கூரை பெயர்ந்து, மழை காலத்தில் பஸ்சிற்குள் குடைபிடித்தாலும், பயணியர் நனைந்தபடியே செல்லும் அவலம் நீடிக்கிறது.

9 பஸ்களின் எப்.சி., ரத்து!



ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறுகையில், ''ஊட்டி போக்குவரத்து கிளையில், எப்.சி.,க்கு வரும் பஸ்களில், சிறிய குறைபாடு இருந்தாலும் எப்.சி., வழங்குவதில்லை; சமீபத்தில், 9 பஸ்களின் எப்.சி., ரத்து செய்யப்பட்டது. அரசு பஸ்களின் குறைபாடு குறித்து மக்கள் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

போக்குவரத்து கழக பொது மேலாளர் கணபதி கூறுகையில், ''பஸ்களில் குறைபாடு இருப்பது உண்மைதான். தற்போது, உதிரி பாகங்கள் படிப்படியாக வாங்கி, தேவையான அளவு வைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
koderumanogaran - coonoor,இந்தியா
28-நவ-202122:16:37 IST Report Abuse
koderumanogaran நீலகிரி தமிழ் நாட்டில் இல்லை. நீலகிரி மக்கள் இரண்டாம் தர குடிமக்கள். சமவெளியில் ஓடித்தேய்ந்த பேருந்துகளை இயக்க பாதுகாப்பான சாலைகள் நீலகிரி மலை மாவட்டத்தில் தான் உள்ளன. பேருந்துகளால் ஏற்படும் அத்தனை இடர் பாடுகளை தாங்கிக்கொள்ளும் ரொம்ப நல்லவர்கள் நிறைந்த மாவட்டத்தைப் பற்றி கவலைப் பட அரசுக்கு ஒன்றும் இல்லை. வாய்மொழியாகவே எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் திறமையான அலுவலர்கள் இருக்கிறார்கள். வாழ்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்.
Rate this:
Cancel
28-நவ-202110:46:12 IST Report Abuse
அப்புசாமி நாலாயிரம் பஸ்களை வாங்கி கை வலிக்க பச்சைக் கொடி காமிச்சு ஆரம்பிச்சு வெச்சாரே மாஜி முதல்வர். நீலகிரிக்கு ஒண்ணும் குடுக்கலியா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X