ராமநாதபுரம்:மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே இல்லம்தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார் துவக்கி வைத்தார். முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து முன்னிலை வகித்தார்.முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கணேசபாண்டியன், வட்டார கல்வி அலுவலர்கள் உஷாராணி, ஜெயா, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரபாகரன், நகரசெயலாளர்கள் கார்மேகம், பிரவீன்தங்கம், ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர்கள் ஆரோக்கியசாமி, ரவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தனசேகர், தர்மராஜ் ஏற்பாடுகளை செய்தனர்.