பரமக்குடி வைகையில் வெள்ளப்பெருக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
00:26

பரமக்குடி:பரமக்குடி வைகை ஆற்றில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு உபரி நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.வைகை அணையில் இருந்து நேற்று முன்தினம்உபரி நீர் திறந்து விடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனுார் மதகு அணையில் நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 1.83 மீட்டரில் 1.70 மீட்டர் வரை நிரம்பியது. இதனையடுத்து வைகை ஆற்றின் வழியாக 7600 கனஅடியும், வலது பிரதான கால்வாயில் 1200 கன அடி, இடது பிரதான கால்வாயில் 1100 கன அடிமற்றும் பரளை ஆற்றில் 450 கன அடி என 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது.இந்நிலையில் வைகை ஆறு வழியாக பார்த்திபனுார் மதகில் இருந்து மொத்தம் உள்ள 25 ஷட்டர்களில் 14 ஷட்டர்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு பெய்த பலத்த மழையடுத்து மழை உபரிநீர் வருகிறது.இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன்,பரமக்குடியில் உள்ள தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.வைகையாற்றில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X