அவசியம் சர்குலர் பஸ்கள் : 5 கி. மீ., தூரத்திற்கு இரு பஸ்களில் பயணம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
00:37

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு நகரமும் அதிகபட்சம் 5 கிலோ மீட்டர் சுற்றளவு மட்டுமே இருக்கும் நிலையில், பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து முக்கிய இடங்களுக்கு செல்ல இரண்டு பஸ்கள் மாறியும், டூவீலர்களில் சென்று விபத்தில் சிக்குவதை தவிர்க்கவும் நகரின் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் சர்க்குலர் பஸ்கள் இயக்க வேண்டும் .மாவட்டத்தில் நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை, கோயில்கள், காய்கறி மார்க்கெட், வங்கிகள், உள்ளாட்சி அலுவலகங்கள், தாலுகா அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன் என பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருவதில் போக்குவரத்தில் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.பத்து நிமிடங்களில் செல்லும் இடத்திற்கு கூட இரு பஸ்கள் மாறும் நிலை உள்ளது. நகரின் பல்வேறு பகுதியில் இருந்து அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் பஸ்சில் எளிதில் சென்று வர முடியாத நிலை காணப்படுகிறது. ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை நகரங்களில் பழைய, புதிய பஸ் ஸ்டாண்டாண்ட்களுக்கு பயணிப்பதில் கூட மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.உதாரணத்திற்குஸ்ரீவில்லிபுத்துார் இந்திரா நகரிலிருந்து சிவன் கோயில் செல்லவும், ராஜபாளையத்தில் திருவள்ளுவர் நகரில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் செல்லவும், சிவகாசியில் ரிசர்வ் லைனிலிருந்து திருத்தங்கல் செல்லவும், விருதுநகரில் அரசு பஸ் டிப்போவில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் செல்லவும், அருப்புக்கோட்டையில் பாவடி தோப்பில் இருந்து பந்தல்குடி ரோட்டிற்கு செல்லவும் இரு பஸ்கள் மாறும் நிலை காணப்படுகிறது.அதிகபட்சம் நகரங்கள் 5 கிலோ மீட்டர் சுற்றளவு இருக்கும் நிலையில் இருபஸ்கள் மாறும் சிரமத்தை தவிர்க்க ஏராளமானோர் டூவீலர்களில் பயணித்து விபத்திற்குள்ளாகி வருகின்றனர். தனியார் ஊழியர்கள் பலர் பணவிரயம், நேர விரயத்திற்க்கும் ஆளாகின்றனர். இந்த நிலை மாவட்டத்தின் அனைத்து நகரங்களில் காணப்படுகிறது.இதை தவிர்க்க நகரின் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் சர்க்குலர் பஸ்களை இயக்க வேண்டும். இதற்கு மக்கள் பிரதிநிதிகளும் குரல் கொடுக்க வேண்டும்................சிரமங்கள், விபத்துகள் குறையும்நகர் பகுதியில் அதிகளவு டவுன் பஸ்கள் இயங்கினாலும் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல இரு பஸ்களில் ஏறி இறங்குவதில் பெண்கள், சிறார்கள் , முதியவர்கள் பாதிக்கின்றனர். அனைத்து பகுதியினையும் ஒருங்கிணைக்கும் வகையில் சர்க்குலர் பஸ்களை இயக்க போக்குவரத்து கழக நிர்வாகம் முன்வரவேண்டும். இதற்கு மக்கள் பிரதிநிதிகளும் உதவிட வேண்டும்.-ஸ்ரீனிவாசன், எல்.ஐ.சி.,முகவர், ஸ்ரீவில்லிபுத்துார்..............

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X