கம்பம்:கம்பம் மணிநகரத்தை சேர்ந்தவர் தாமஸ் 50, இவர் கூடலுாரில் டிரைவராக பணியாற்றினார். நேற்று முன்தினம் இரவு பணி முடித்து தம்பி ஜான் 46, இரு டூவீலர்களில் கம்பம் நோக்கி வந்தனர்.
கம்பம் பைபாஸ் ரோடு பிரியும் இடத்தில் தேனியிலிருந்து குமுளி நோக்கி சென்ற வேன், தாமஸ் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதி துாக்கி வீசப்பட்டார். காயமடைந்த தாமஸை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். வேன் டிரைவர் திருவள்ளூர் மணவாளன் நகரை சேர்ந்த ஸ்ரீதர் 33, ஐ கைது செய்து விசாரிக்கின்றனர்.