சின்னமனுார்:சின்னமனுார் நகராட்சிக்கு புதிய குடிநீர் திட்டத்திற்கு மதிப்பீடு தயார் செய்ய சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
சின்னமனுார் நகராட்சி 20 ஆண்டுகளுக்கு முன்பே முல்லைப் பெரியாற்றில் உறைகிணறு அமைத்து, குடிநீர் வினியோகம் செய்தது. அப்போதைய மக்கள் தொகைக்கும் தற்போதுள்ள மக்கள் தொகைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
நகராட்சியில் 27 வார்டுகளில் 70 ஆயிரம் மக்கள் தொகை இருக்கும். நாளுக்கு நாள் விரிவாக்க பகுதிகள் அதிகரித்து வருகிறது. குடிநீர் 20 முதல் 30 லட்சம் லிட்டர் மட்டுமே பம்பிங் ஆகிறது. நகரில் வாரம் ஒரு முறை குடிநீர் வினியோகிககப்படுகிறது. ஒத்தவீடு, அய்யனார்புரம், பொன்னநகர், காந்திநகர்காலனியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. புதிய குடிநீர் திட்டம் தயார் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.