எப்போது நீர் பரிசோதனை ஆய்வகம் பயன்பாட்டிற்கு வருவது: பணம் நேர விரயத்தால் விவசாயிகள் சிரமம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
02:12

தேனி மாவட்டத்தில் தண்ணீர் பரிசோதனை ஆய்வகம் செயல்படாததால் பிற மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு முடிவு மேற்கொள்வதால் கூடுதல் செலவு கால விரயமும் ஏற்படுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.



மாவட்டத்தில் போர்வெல்' அமைப்போர் நீரின் தன்மையை பரிசோதித்து அதற்கு ஏற்ப வீடுகளில் தண்ணீர் சுத்திகரிப்பு மிஷின்'கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதே போல் விவசாயிகள் பயிர் வளர்ச்சிக்கு நீரின் தன்மையை அறிந்து கொள்ள குடிநீர் வாரிய பரிசோதனை ஆய்வகங்களில் ஆய்வு செய்து அதன் முடிவில் நீரின் தன்மைக்கு ஏற்ப பயன்படுத்துவார்கள்.


தேனி மாவட்டத்திற்கான நீர் பரிசோதனை நிலையம் வைகை அணையில் இருந்தது. இங்கு ஆய்வக பணியாளர்கள் நியமனம் இன்றி பல ஆண்டுகளாக மூடியுள்ளது. இதனால் நீரின் ஆய்வுகாக மதுரையில் உள்ள ஆய்வகத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு ஒரு பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த தொகை ரூ.1652.


ஆனால், அங்கு அதிகளவு மாதிரிகள் வருவதால் ஆய்வகத்தில் பணிபுரிபவர்கள் மூலம் தனியார் ஆய்வகங்களுக்கு பரிந்துரை செய்கின்றனர். தனியார் ஆய்வகங்களில் ஒரு பரிசோதனைக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வசூலிக்கின்றனர். இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். வைகை அணை நீர் ஆய்வகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி தாலுகாவில் நீரின் காரதன்மை அதிகரித்துள்ளது. இதனால் நீர் பரிசோதனை அவசியம். வெளி மாவட்டங்களுக்கு சென்று நீரை பரிசோதனை செய்வதால், காலவிரயமும், கூடுதல் செலவாகிறது. மாவட்ட நிர்வாகம் வைகை அணை குடிநீர் பரிசோதனை ஆய்வகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். '' என்றனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X