மாதவரத்தில் தயாராகும் மூலிகை சாக்லேட் சர்க்கரை நோயாளிகளும் ருசித்து மகிழலாம்! | சென்னை செய்திகள் | Dinamalar
மாதவரத்தில் தயாராகும் மூலிகை சாக்லேட் சர்க்கரை நோயாளிகளும் ருசித்து மகிழலாம்!
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 நவ
2021
02:26

மாதவரம் : பூச்செடி, மூலிகை செடி, வீட்டு அலங்கார அழகு செடிகள் உற்பத்தி மட்டுமல்லாமல், விதவிதமான சாக்லேட் தயாரிப்பிலும் தோட்டக்கலைத் துறை அசத்தி வருகிறது.

\சென்னை, மாதவரம் பால்பண்ணை அருகே, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை பூங்கா, செடிகள் விற்பனை மையம், தோட்டக்கலை கிடங்கு ஆகியவை உள்ளன. அவற்றில், பல்வேறு வகையான பூச்செடிகள், வீட்டு அலங்கார அழகு செடிகள், மூலிகை செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன.அதுமட்டுமல்லாமல், அங்குள்ள ஒருங்கிணைந்த சாக்லெட் தயாரிப்பு கூடம் மூலம் தயாரிக்கப்படும் விதவிதமான சுவையான சாக்லெட்டும், பொதுமக்களை கவர்ந்து வருகிறது.தென்னை, பாக்கு மரங்கள் இடையே ஊடு பயிராக வளர்க்கப்படும் கொக்கோ பீனுடன். கொக்கோ பட்டர், சர்க்கரை, மில்க் பவுடர், லெசிதின் ஆகிய கூட்டுப்பொருட்களை கலந்து, சுகாதாரமான வகையில், தரமான சாக்லேட் தயாரிக்கப்படுகிறது.

அதில், 'மில்க், டார்க், மில்க் நட்ஸ்' என, மூன்று வகை சாக்லெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இதில், மில்க் சாக்லேட் தயாரிக்க 18 மணி நேரமும், 'டார்க்' சாக்லேட் தயாரிக்க 36 மணி நேரமும் ஆகிறது. மில்க் ரக சாக்லேட்டுகள் ஆறு மாதம் வரையிலும், 'டார்க்' சாக்லேட் ஓராண்டு வரையிலும் கெடாமல் இருக்கும் என, தயாரிப்பு நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.இது குறித்து, தோட்டக்கலை துறையினர் கூறியதாவது:கொக்கோ பீன் எனப்படும் தாவர மூலப்பொருள் மூலம் தயாரிக்கப்படும்

இந்த சாக்லெட்டை, நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம். ஒரு வாரத்திற்கு, 5 - 6 கிலோ சாக்லெட் தயாரிக்கப்படுகிறது. ஒரு கிலோவில் 24 'பீஸ்' சாக்லெட் இருக்கும். அதில், 1 பீஸ் விலை 40 ரூபாய்.சிறுதொழில் வளர்ச்சி மூலம், மகளிருக்கான வேலை வாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில், சாக்லேட் தயாரிப்பு கூடம் இயங்கி வருகிறது.மேலும், தோட்டக்கலைத்துறையின் மூலம், செம்மொழி பூங்கா உள்ளிட்ட அவற்றின் விற்பனை நிலையங்களில், செடி, விதை, தொட்டி, ஊட்டியின் வரத்தான 'ஜாம் ஜல்லி' எனப்படும் பழக்கூழ், கன்னியாகுமரி மாவட்ட தேன், நேந்திரம் சிப்ஸ் உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X