போலீஸ் செய்திகள்...: தேனி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
02:26

சிறுமி திருமணம்: கணவர் கைது



தேனி: பெரியகுளம் சருத்துப்பட்டி பெரியதுரை 28. இவருக்கும் உத்தமபாளையம் 18 வயது சிறுமிக்கும் 2020ல் கன்னியப்பபிள்ளைபட்டி கோபால்சாமி கோயிலில் உறவினர்கள் கட்டாயம் திருமணம் நடத்தினர். 6 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பெரியதுரை சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தார். ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார், கட்டாயத் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பெரியதுரை உறவினர்கள் கண்ணன், கீதா, வித்யா, திருக்குமரன், மரகதம், லதா உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, கணவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.



கணவர் உட்பட 6 பேர்மீது வரதட்சணை வழக்கு



தேனி: தேனி சமதர்மபுரம் ஜெயபிரகாஷ்தெரு சீலாதேவி 27. இவரது கணவர் பழனிச்செட்டிபட்டி ராசிநகர் வெற்றிச்செல்வன் 33. இருவருக்கும் 2020 ல் திருமணம் நடந்தது. 35 பவுன் தங்க

நகை, ரூ.3 லட்சம் மதிப்புள்ள சீதனப் பொருட்கள் வழங்கினர். சீலாதேவியின் மாமனார் பாலசுப்பிரமணியன், மாமியார் கமலா, உறவினர்கள் திருமுருகன், காமராஜ், லட்சுமி துாண்டுதலில் கணவர் வெற்றிச்செல்வன், 100 பவுன் நகை கூடுதலாகவும், பெற்றோரின் வீட்டை எழுதித்தர மிரட்டினர். சீலாதேவி அலைபேசி, 35 பவுன் நகையை பெற்று திருப்பித்தரவில்லை. தேனி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா, எஸ்.ஐ., சுப்புலட்சுமி ஆகியோர் வெற்றிச்செல்வன், அவரது உறவினர்கள் உட்பட 6 பேர் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.



காதல்ஜோடி தஞ்சம்


தேனி: மதுரை உசிலம்பட்டி தாலுகா செட்டியபட்டி ராமச்சந்திரன் மகள் ஷீலா 19. டிப்ளமோ படித்துவிட்டு, வீட்டில் உள்ளார். அதேப்பகுதியைசேர்ந்த ஈஸ்வரன் மகன் விஜயகுமார் 24. இரு

ஆண்டுகளாக காதலித்தனர். இருவீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நவ., 26ல் ஆண்டிபட்டி
கோயிலில் திருமணம் செய்து பூதிப்புரம் உறவினர் வீட்டில் தங்கினர். நேற்று தேனி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை
நடத்துகின்றனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X