சின்ன ஆவரங்காட்டில் மயானத்திற்கு செல்ல பாதையில்லாமல் மக்கள் அவதி | சிவகங்கை செய்திகள் | Dinamalar
சின்ன ஆவரங்காட்டில் மயானத்திற்கு செல்ல பாதையில்லாமல் மக்கள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 நவ
2021
02:28

மானாமதுரை:மானாமதுரை அருகே சின்ன ஆவரங்காட்டில் இறந்தவர்களை கொண்டு செல்ல பாதையில்லாததால் வயல்களுக்குள் உடலை கொண்டு செல்லும் நிலை உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.சின்ன ஆவரங்காட்டில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்களின் தாய் கிராமமான பெரிய ஆவரங்காட்டிற்கு செல்ல ரோடு வசதி இல்லாததால் வயல்களுக்குள் நடந்து சென்று வருகின்றனர். வாகனங்களில் செல்ல வேண்டுமென்றால் வெள்ளிக்குறிச்சியை சுற்றி 15 கி.மீ.,துாரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.சின்ன ஆவரங்காட்டில் யாராவது இறந்து விட்டால் அவர்களின் உடலை சின்ன ஆவரங்காட்டிலிருந்து பெரிய ஆவரங்காட்டில் உள்ள மயானத்திற்கு வயல்களுக்குள் சிரமப்பட்டு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், விவசாய நேரங்களில் மயானத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இறந்தவர்களின் உடல்களை பாடையில் கட்டி துாக்கி கொண்டு 2 கி.மீ., வயல்வெளி, தண்ணீருக்குள் சிரமப்பட்டு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது, என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X