மானாமதுரை:மானாமதுரையில் அதிகாலையில் வீட்டு வாசலில் கோலமிட்ட பெண்ணிடம் 10 பவுன் நகையை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மானாமதுரை ரயில்வே காலனி ஜீவா நகர் பகுதியைசேர்ந்த பாலசுப்ரமணியன் மனைவி தனபாக்கியம் 61,இவர் நவ.14ம் தேதி அதிகாலை 5:45 மணிக்கு வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த போது 25 வயது மதிக்கத்தக்க 2வாலிபர்கள் தனபாக்கியம் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்து தப்பினர்.தனபாக்கியம் மானாமதுரை போலீசில் கொடுத்த புகாரின் மானாமதுரை டி.எஸ்.பி., சுந்தரமாணிக்கம் தலைமையிலான தனிப்படை போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்ட மதுரை நாராயணபுரத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன்விஜய் 22, நாகூர் மகன் சுல்தான் 20 இருவரையும் கைது செய்தனர்.